ஆசியாவில் ஊழல் மிகுந்த நாடு இந்தியா: ஆய்வறிக்கை

0

பாஜகவின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் போது இந்தியாவை ஊழல் அற்ற நாடாக மாற்ற இருப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது வெளியான ஆய்வு ஒன்றின் அறிக்கையின் படி ஆசிய கண்டத்தில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

Transparency International என்ற அமைப்பு நடத்திய இந்த ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது. மொத்தம் 16 ஆசிய நாடுகளில் இந்த ஆய்வை மேற்கொண்ட இந்த அமைப்பு இந்தியாவில் பொது சேவைகளை பெற விரும்பும் 10 பேரில் 7 லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஊழல் லஞ்சம் குறைவான நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பத்திற்கு வெறும் .2% மக்கள் லஞ்சம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

மொத்தமா 900 மில்லியம் மக்கள் அரசின் பொது சேவைகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்துள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. “People and Corruption: Asia Pacific” என்று தலைப்பிட்ட தங்களின் ஆய்விற்கு மொத்தம் 22000 மக்களை சந்தித்து லஞ்சம் ஊழல் குறித்த அவர்களின் அனுபவம் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் தங்கள் நாட்டு அரசுகல், அரசுத் துறையில் ஊழலை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு நாட்டு மக்களிடையே கேள்வி எழுப்பப்பட்ட போது, இந்தியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் வாழும் மக்கள் தங்களது அரசு ஊழலுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றி வருகிறது என்று கூறிய நிலையில் ஊழல் மிகவும் குறைவாக காணப்பட்ட ஜப்பான், தென் கொரியா முதலிய நாடுகளில் உள்ள மக்களோ தங்கள் நாடு ஊழலை ஒழிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆய்வு மேற்கொண்ட அனைத்து பகுதிகளில் உள்ள மக்களில் ஐந்தில் இருவர், ஒட்டுமொத்த காவல்துறையும் ஊழல் மிகுந்து காணப்படுவதாக கூறியுள்ளனர். ஆசிய நாடுகளில் பாகிஸ்தான் மக்கள் தான் காவல்துறையினரால் அதிகமாக லஞ்சம் கோரப்படும் நபர்கள் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இங்கு பத்தில் ஏழு பேர் காவல்துறையினருக்கு லஞ்சம் செலுத்துகின்றனர். இந்திய காவல்துறையில் உள்ள லஞ்ச விகிதாச்சாரம் 54% ஆகவும் சீனாவில் இது 12% ஆகவும் உள்ளது தெரியவந்துள்ளது.

மற்ற அனைத்து நாடுகளையும் விட இந்தியாவில் தான் அரசு கல்வித்துறையிலும்(58%) மருத்துவத் துறையிலும்(59%) அதிலவிலான லஞ்சம் காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பாகிஸ்தான் மற்றும் சீனாவில் கல்வித்துறையில் லஞ்சம் தலா 9% மற்றும் 29% இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இது மருத்துவத்துறையில் சீனாவில் 18% ஆகவும் பாகிஸ்தானில் 11% ஆகவும் உள்ளது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இது குறித்து Transparency International அமைப்பின் ஆசிய பகுதி ஒருங்கிணைப்பாளர் இல்ஹாம் முஹம்மத் கூறுகையில், “மக்கள் தங்களுக்கு சேவைகள் விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுப்பதில்லை. இங்கே பிரச்சனை என்னவென்றால் பலருக்கு மருத்துவம், கல்வி, மற்றும் சட்டம் ஒழுங்கு துறைகளில் எந்த சேவையும் கிடைப்பதில்லை என்பதே. ஆசியாவின் ஆய்வுத் தகவலில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஏழைகள் தான் இது போன்ற லஞ்சத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.” என்று கூறியுள்ளார்.

மிகவும் குறைவான அரசு சம்பளம் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை தெரிவிக்க சரியான வசதிகள் இல்லை என்பது தான் இந்த லஞ்ச ஊழலுக்கு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது லஞ்சம் கொடுத்தாவது  அரசு சேவைகளை பெரும் அளவிற்கு பொருளாதார வசதி படைத்திராதவர்கள் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.