ஆசிரியர் சைனாபா தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க டைம்ஸ் நவ்வின் ராகுல் சிவசங்கர் மற்றும் ஆனந்த் நரசிம்மன் மனு

0

ஆசிரியர் சைனாபா தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க டைம்ஸ் நவ்வின் ராகுல் சிவசங்கர் மற்றும் ஆனந்த் நரசிம்மன் மனு

கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் “கேரளாவில் வேட்டையாடப்பட்டு மதமாற்றப்படும் இந்து பெண்கள்” என்ற தலைப்பில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு ஒரு ரகசிய NIA அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் ஆசிரியர் சைனாபா இந்துப் பெண்களை இஸ்லாதிற்கு மதம் மாற்றுபவர் என்று குறிப்பிடப்பட்டதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி குறிப்பிட்டது.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆசிரியர் சைனாபா, தான் பெண்களை மதம்மாற்றுபவர் என்றும் மதம் மாறிய பெண்களுக்கு அடைக்கலம் தருபவர் என்றும் தன்னை குறித்து தவறான கருத்துக்களை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அவர்களின் நிகழ்ச்சி மூலம் பரப்பியுள்ளது என்று புகாரளித்தார். மேலும் டைம்ஸ் நவ் தங்கள் நிகழ்ச்சி மூலம் தன்னை இந்திய முஸ்லீம்களை சிறுமைப் படுத்தும் லவ் ஜிகாத் பரப்புரையுடன் தொடர்பு படுத்த முயல்கிறது என்றும் டைம்ஸ் நவ் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

2017 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் ஒளிபரப்பட்ட இந்த நிகழ்ச்சியை உலகெங்கிலும் உள்ள பல லட்சம் மக்கள் கண்டுள்ளனர் என்றும் அந்த நிகழ்ச்சியை கண்ட தன்னுடைய பல நண்பர்கள், நலம்விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் தன்னை அழைத்து தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர் என்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் இந்த நிகழ்ச்சியினால் தனக்கு சமூகத்தில் இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

சைனாபாவின் புகாரில் பெயரிடப்பட்ட டைம்ஸ் நவ் ராகுல் சிவசங்கர் மற்றும் அந்த தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியராக பணியாற்றிய ஆனந்த் நரசிம்மன் ஆகியோர், தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மேலும் தங்களது தொலைக்காட்சியில் சைனாபா குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பட்ட போது இரண்டு மத மாற்ற வழக்குகள் தொடர்பாக சைனாபா விசாரிக்கப்பட்டு வந்தார் என்றும் அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.

லவ் ஜிகாத் என்று கூறப்பட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்ற ஷபின் ஜஹான், ஹாதியா வழக்கு தொடர்பாக ஆசிரியர் சைனபா விசாரிக்கப்பட்டார். ஹாதியா அகிலாவாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற போது தனது பெற்றோர்களுடன் செல்ல விருப்பம் இல்லாமல் இருந்த நிலையில் சைனபா அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்.

Comments are closed.