ஆதாரங்களை நிரூபித்தால் தூக்கில் தொங்க நான் தயார்: கவுதம் கம்பீர்

0

கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், ஆம் ஆத்மி வேட்பாளராக அடிஷியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அடிஷியை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் விமர்சிக்கும் துண்டு நோட்டீஸ், சில குடியிருப்புகளில் செய்தித்தாள்களுடன் இணைத்து விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் சிசோடியாவுடன் இணைந்து அடிஷி நிருபர்களை சந்தித்தார். அப்போது கதறி அழுத அவர், கவுதம் கம்பீர்தான் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

அதற்கு கவுதம் கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார். இச்செயலில், நான் ஈடுபட்டதாக நிரூபித்தால், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் நோட்டீஸ் விவகாரத்தில் எனக்கு தொடர்பு என்ற குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால், நான் பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயார் என்றார் கம்பீர். நிரூபிக்கப்படாவிட்டால் கெஜ்ரிவால் அரசியலைவிட்டு விலக தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.