ஆதாரமின்றி ஐந்து ஆண்டுகளாக சிறையில் சித்திரவைப்படும் டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர்

0

மே 9, 2014 அன்று மாவோயிஸ்டுகள் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்ட, டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாபாபா. இவர் உடல் ஊனமுற்றவர். மார்ச் 7, 2017 ஆம் ஆண்டு அவர் நாக்பூர் மத்திய தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏப்ரல் 30ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் (OHCHR) நிபுணர் குழு, சாய்பாபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய அரசாங்கத்திற்கு உடனடியாக கடிதம் எழுதினர்.

சாய்பாபா சக்கர நாற்காலி பயன்படுத்துபவர். அவர் 19 மருத்துவ வியாதிகளால் அவதிப்பட்டிருந்தார். “அவரது மூளையில் ஓர் நீர்க்கட்டி உள்ளது. இதன் காரணமாக அவர் மயக்கமும் அடைந்தார் என அவரது மனைவி வசந்த குமாரியிடம் டெல்லியிலிருந்து அதிகாரிகள் தொலைபேசியில் தெரிவித்தனர்.

மார்ச் 25 அன்று, நாக்பூர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சாய்பாபாவின் மருத்துவ ஜாமீன் மனு மும்பை உயர் நீதிமன்றத்திற்கு வந்தது.

சாய்பாபவின் மனைவி வசந்தகுமாரி கூறியதாவது: “சீர்திருத்தம் செய்ததற்காக கணவருக்கு சிறை வழங்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்கின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அப்படி வழங்க முடியவில்லை என்றால் அவர் வேறு சிறைக்கு மாற்றப்பட வேண்டும்” என கூறினார்.

“பிரக்யா சிங் தாகூர், குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால் சாய்பாபாவை வேறு சிறைக்கு கூட மாற்றம் செய்ய முடியாதா?” என வசந்தகுமாரி கேள்வி எழுப்பினார்.

“UAPA [சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்] என் தந்தையை குற்றவாளி என தவறாக சித்தரித்துவிட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஒரு நபரை குற்றவாளி என்று எப்படி நிரூபிக்க முடியும்? என சாய்பாபாவுடைய மகள் மன்ஜீரா தெரிவித்துள்ளார்.

வசந்தகுமாரி, “சாய்பாபாவை ஏன் சித்திரவதை செய்தனர் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் அவர் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக நின்றார்.  அவர் தனது சித்தாந்தத்திற்கு சிறையில் இருக்கிறார். இது ஜனநாயகம் இல்லை” என்றும் சாய்பாபா மனைவி தெரிவித்துள்ளார்.

Comments are closed.