ஆதார் எண்களை இணையத்தில் பகிர வேண்டாம்: UIDAI

0

ஆதார் எண்களை இணையத்தில் பகிர வேண்டாம்: UIDAI

ஆதார் மிகவும் பாதுகாப்பானது என்று மக்களுக்கு உணர்த்த பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் (TRAI) தொலை தொடர்பு ஒழுங்கு வாரியத் தலைவர் R.S.ஷர்மாவின் சமூக வலைதளமான டிவிட்டரில் ஹாக்கர்களுக்கு பகிரங்க சவால் விடுத்தார்.

தனது ஆதார் எண்ணை டிவிட்டரில் வெளியிட்ட அவர் ஆதார் மிகவும் பாதுகாப்பானது என்றும் அதனை மறுப்போர் தனது ஆதார் எண்ணை வைத்து தனக்கு தீங்கு விளைவித்து காட்டட்டும் என்றும் இது அவர்களுக்கு தான் விடுக்கும் பகிரங்க சவால் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பல்வேறு முனைகளில் இருந்து அவரது ஆதார் எண்ணை பயன்படுத்தி பலர் தங்கள் கை வரிசையை காட்டத் தொடங்கினர். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து 14 வகையான அவரது தனிப்பட்ட தகவல்கள் முதல் அவர் கணக்கில் பணம் இடுவது வரை இந்த பிரச்சனை நீண்டது. இந்நிலையில் UIDAI யாரும் தங்களது ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஆதார் எண்ணை பொது வெளியில் பகிர்ந்து அதனை ஹாக் செய்ய சவால் விடுவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது.

இன்னும் பிறருடைய ஆதார் என்னை மற்றொருவர் பயன்படுத்துவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல என்றும் இது ஆள்மாறாட்டமாக கருதப்பட்டு இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ குற்றமாக கருதப்படும் என்றும் UIDAI தெரிவித்துள்ளது.

Comments are closed.