ஆதார் பாதுகாப்பு குறித்து கேள்வி: இணைய குண்டர்களால் தொந்தரவு செய்யப்பட்ட தோணியின் மனைவி

0

இந்திய கிரிக்கட் வீரர் மகேந்திர சிங் தோணியின் ஆதார் தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியானது பல்வேறு தரப்பு மக்களிடையே ஆதாரின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியது. இது குறித்து கவலையுற்ற தோணியின் மனைவி மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாதிடம் அவரது ட்விட்டர் கணக்கு மூலம், இந்த அரசின் கீழ் மக்களின் தகவல்கள் பாதுகக்கப்படுகின்றனவா என்று கேள்வி எழுப்பினார்.

தனது கணவனின் அதார் எண், தொலைபேசி எண் உட்பட பல தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட நிஜமான இந்த வருத்தம் பல வலது சாரி இணைய குண்டர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆதாரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய சாக்ஷியை கண்டபடி வசைபாடியது அந்த கும்பல்.

ஒரு குடிமகனால் அரச சேவை மீது வைக்கப்படும் உண்மையான விமச்சனத்தை கூட தாங்கிக்கொள்ள முடியாத அந்த வலதுசாரி கும்பல் சாக்ஷியின் உடை படுக்கைஅறை வரை குறிப்பிட்டு பல ஆபாசமான கருத்துக்களை அவரை நோக்கி வீசியுள்ளன. இன்னும் அவர் எப்படி மத்திய அமைச்சரிடம் அத்தகைய கேள்வி எழுப்பலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தோணியின் தகவல்கள் வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.