ஆதித்யநாத் ஆட்சியில்…

0

ஆதித்யநாத் ஆட்சியில்…

டிசம்பர் 3… உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் இறந்த பசுவின் உடல்கள் கிடப்பதாக செய்தி பரப்பப்பட்டு சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரட்டப்பட்டனர். திரண்டவர்களில் பெரும்பான்மையினர் பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இறந்த பசுக்கள் கண்டெடுக்கப்பட்ட வயலின் சொந்தக்காரரான ராஜ் குமார் சௌத்ரி, அவற்றை அடக்கம் செய்துவிடலாம் என்று கூறிய போதும், பிரச்சனையை தேடித் திரியும் பஜ்ரங் தள் குண்டர்கள், இறந்த பசுக்களை ஒரு வாகனத்தில் ஏற்றி நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். சம்பவம் நடைபெற்ற மகாவ் கிராமத்தை சேர்ந்தவர்கள், ‘‘செய்தி நமக்கு தெரியும் முன் மற்ற கிராமத்தினருக்கு எப்படி தெரிந்தது?’’ என்ற கேள்வியை இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பசுவை வைத்து பிரச்சனையை எழுப்பியவர்கள் களேபரத்தை ஏற்படுத்தி ஒருவரை சுட்டுக் கொன்றனர்.

பசு குண்டர்கள் செய்யும் வழக்கமான செயல்தானே இது என்று கடந்து செல்பவர்களுக்கு கூட இந்த செய்தியை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. காரணம், இம்முறை இந்துத்துவ குண்டர்களால் கொலை செய்யப்பட்டவர் சுபோத் குமார் சிங் என்ற காவல்துறை இன்ஸ்பெக்டர்! இந்துத்துவ குண்டர்களின் வன்முறையை கேள்விப்பட்டு வன்முறையை அடக்கச் சென்ற இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் கலவர கும்பலால் சுற்றி வளைத்து கொலை செய்யப்பட்டார். ‘‘அவனுடைய துப்பாக்கியை பறியுங்கள்! அவனை சுடுங்கள்!’’ என்று வெறித்தனமாக பசு குண்டர்கள் கத்திச் சென்ற வீடியோ காட்சிகள் வேகமாக பரவின. சுபோத் குமார் சிங் திட்டமிட்டு கொல்லப்பட்டதற்கு அவர் மீது செலுத்தப்பட்ட ஏழு தோட்டாக்கள் சாட்சி இந்த களேபரத்தில் சுமித் சிங் என்ற 18 வயது இளைஞனும் கொல்லப்பட்டான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.