ஆந்திராவில் ஆட்சி மாற்றம்: முதல்வராகப் பதவியேற்கும் ஜெகன்மோகன் ரெட்டி!

0

ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 146 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் ஆந்திராவில் ஆட்சியமைக்க உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்துவருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி.

175 சட்டமன்ற தொகுதிகளில் 146 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், 28 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம், ஜெகன்மோகன் ரெட்டியிடம் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழக்கிறார்.

Comments are closed.