ஆந்திரா என்கௌண்டர்: வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்

0

ஏப்ரல் 7 அன்று ஆந்திர காவல்துறையினர் நடத்திய என்கௌண்டரில் இருபது நபர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த சந்தேகங்கள் உடனடியாக எழுப்பப்பட்டன. தற்போது வெளிவரும் தகவல்கள் ஒவ்வொன்றும் இந்த என்கௌண்டர் போலியானது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளன.
இந்த இருபது நபர்களில் ஏழு நபர்களை பேருந்தில் பயணம் செய்யும் போது ஆந்திர காவல்துறையினர் அழைத்து சென்றதை தான் கண்டதாக அதே பேருந்தில் பயணம் செய்த ஒருவர் தெரிவித்துள்ளர். சம்பவம் நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இரு மாநில எல்லைக்கருகில் பேருந்தை நிறுத்தி அவர்களை அழைத்து சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டகிரிபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த எட்டு நபர்கள் கண்ணாமங்கலம் என்ற இடத்திலிருந்து வேலூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து திருத்தணிக்கு பேருந்தில் சென்றனர். பின்னர் அங்கிருந்து ரேணிகுண்டா பேருந்தில் செல்லும் போது காவல்துறையினர் அப்பேருந்தை நிறுத்தி இவர்களை அழைத்து சென்றுள்ளனர். அவர்களில் மகேந்திரன் என்பவரை மட்டும் திருப்பி அனுப்பியவர்கள் மற்றவர்களை அழைத்து சென்றனர். காவல்துறையினர் அப்போது சாதாரண உடையில் இருந்தனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல்களை அதே பேருந்தில் பயணம் செய்த சேகர் என்பவர் தெரிவித்துள்ளார்.
‘காவல்துறையினர் மீதான அச்சம் காரணமாக சேகர் ஆஜர் ஆவதற்கு பயப்படுவதாக கண்ணாமங்கலம் டி.எஸ்.பி. மணி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இருபது நபர்கள் கொல்லப்பட்ட செய்தி கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்களுக்கு இந்த செய்தி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Photo courtesy: Indianexpress)

Comments are closed.