ஆபாச வீடியோவில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ

0

அஸ்ஸாம் மாநில பாஜக கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் ஆபாச வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பாஜக வை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக தங்களது குண்டர் படைகள் மூலம் பிறருக்கு ஒழுக்கம் போதிப்பதும் காதலர் தினத்தன்று எப்போதுமில்லாத அளவிற்கு கலாச்சார பற்றுள்ளவர்களாக மாறும் இவர்கள் சட்டசபையில் ஆபாச படம் பாரத்தை நாடறியும். தற்போது இவர்களின் ஒழுக்கத்திற்கு(?) மற்றுமொரு சான்றாக அஸ்ஸாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் விடுதி அரை ஒன்றில் இளம்பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாஜக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத நிலையில் இந்த வீடியோவில் இருப்பதாக கூறப்படும் எம்.எல்.ஏ.ராமகந்தா டியுரி, அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்றும் தனது அரசியல் எதிரிகள் தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமலும், தற்போது விரிவு படுத்தப்பட இருக்கும் அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருக்கும் வேலையில் அதனை பிடிக்காதவர்கள் இது போன்று பரப்புரை செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் இருப்பது தான் தான் என்று நிரூபிக்கப்பட்டால் தான் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அரசியலை விட்டே ஒதுங்கி விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு பிரச்சனைகள் வரும் போது இது போன்று வாக்குறுதிகளை வழங்குவது பாஜக வினருக்கு புதிது ஒன்றும் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடு ரோட்டில் வைத்து என்னை கொளுத்துங்கள் என்று மோடி கூறியது மக்களுக்கு நினைவிருக்கக் கூடும்.

Comments are closed.