ஆப்கானில் வசந்தம் வீசுமா?

0

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் துணையுடன் அப்துர் ரஹ்மான் கான் என்பவர் 1880ல் ஆப்கானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அப்பகுதியில் தங்கள் அரசுக்கு எதிரான எதிர்ப்புகளை ஈடுகட்ட அப்துர் ரஹ்மான் கானுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து தங்கள் அதிகாரத்தை தக்க வைத்தனர் ஆங்கிலேயர்கள். 1930களில் மன்னர் ஜாகிர் ஷா ஆட்சிக்கு வந்து தனது குடும்பத்தினரின் துணையுடன் மூன்று தசாப்தங்கள் ஆட்சி செய்தார். அரச குடும்பத்தில் உள்ளவர்கள் அரசாங்க உயர் பதவிகளுக்கு வருவதை தடை செய்யும் புதிய சட்டத்தை 1964ல் ஜாகிர் ஷா கொண்டு வந்தார். ஆனால் 1973ல் மன்னரின் உறவுக்காரரான முகம்மது தவுத் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி ஜாகிர் ஷாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

1978 ஏப்ரல் மாதம் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தன. ஆப்கான் மக்களின் தீர்க்கமான எதிர்ப்பை சந்திக்க திராணியற்ற சோவியத் படைகள் 1980களின் இறுதியில் ஆப்கானை விட்டும் அவமானத்துடன் வெளியேறினர். சோவியத் படைகள் திரும்பினாலும் அவர்களின் எடுபிடிகளே தொடர்ந்து ஆட்சி செய்தனர். சோவியத் படைகளை இணைந்து எதிர்த்த ஆப்கானியர்கள் துப்பாக்கிகளை தங்களுக்கு எதிராக திருப்பினர். உள்நாட்டு யுத்தத்தில் நாடு சிதைந்து கொண்டிருந்த நிலையில் 1996ல் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். தனது தேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை காரணமாக வைத்து 2001ல் ஆப்கான் மீது தாக்குதல்களை ஆரம்பித்தது அமெரிக்கா. எந்த உசாமா பின் லேடனை காரணமாக வைத்து தாக்குதல்களை ஆரம்பித்ததோ அந்த பின் லேடன் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் ஆப்கானியர்களின் அவலங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அந்நிய ஆக்கிரமிப்பை ஆப்கானியர்கள் என்றும் சகித்ததில்லை என்பதை வரலாறு உணர்த்துகிறது. அதனால்தான் உள்ளூர் கைக்கூலிகளை வைத்து ஆப்கானை கட்டுக்குள் வைத்திருந்தனர் அந்நிய சக்திகள். நூற்றாண்டுக்கு முந்தைய யுக்தி என்றாலும் அதுதான் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. அமைதியை நிலைநாட்டப்போகிறோம், ஜனநாயகத்தை மலரச் செய்யப் போகிறோம் என்று எங்கெல்லாம் அமெரிக்கா கால் வைத்ததோ அங்கெல்லாம் முடிவுறாத துயரங்களை மட்டுமே அந்நாட்டால் விதைக்க முடிந்தது. ஆப்கானும் இதற்கு விதிவிலக்கல்ல. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.