ஆப்பிரிக்கா: மக்கள் எழுச்சி இலக்கை அடையுமா?

0

ஆப்பிரிக்கா: மக்கள் எழுச்சி இலக்கை அடையுமா?

இராணுவ சதி, புரட்சி, ஜனநாயகம் என எந்த ரூபத்தில் சர்வாதிகள் உருவானாலும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. பல்லாண்டுகள் ஆட்சியில் நீடித்தாலும் மக்கள் எழுச்சிக்கு ஒரு சிறு பொறி போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால் அடிமைத்தனத்தை மக்கள் எப்போதும் விரும்பி ஏற்றுக் கொண்டதில்லை. சிலர் திட்டமிட்டே சர்வாதிகாரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இன்னும் சிலர் மக்கள் நலன் விரும்பிகளாக ஆட்சியை தொடங்கினாலும் பதவி மோகமும் அதிகார போதையும் கொடுக்கும் சுகத்தில் சர்வாதிகாரத்தை சுவீகரித்துக் கொள்கிறார்கள். அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும் நிலையில் போராட்டம் நிர்ப்பந்தமாகிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் இரண்டு, மூன்று தசாப்தங்கள் ஆட்சியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து பதவியை விட்டும் அப்புறப்படுத்தப்பட்டிருப்பது மக்கள் சக்தியின் வலிமையை காட்டுகிறது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் அதிபர் உமர் அல் பஷீர் முப்பது ஆண்டுகள் பதவியில் இருந்தவர். இராணுவ புரட்சி மூலம் 1989ல் ஆட்சிக்கு வந்த இவர் மக்களின் ஒரு பகுதியினரின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தாலும் தேவையற்ற இராணுவ நடவடிக்கைகள், பொருளாதார மந்த நிலை, சுதந்திரம் பறிப்பு, சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டது போன்ற காரணங்களால் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். மக்களின் அத்தியாவசிய உணவான பிரட்டின் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கிய போராட்டம், பின்னர் ‘அதிபர் ஆட்சியை விட்டும் போக வேண்டும்’ என்ற இலக்கை நோக்கி சென்றது.

அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும், தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் உமர் அல் பஷீர் சமாதானம் பேசினாலும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மாணவர்கள், பட்டதாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கினாலும் வரம்பற்ற அதிகாரத்தை கொண்ட இராணுவம் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காததால் தொடர்ந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தார் உமர். இதனிடையே போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர், இன்னும் பலர் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவு என்று அரசாங்கம் கூறினாலும் அதைவிட பன்மடங்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என்றனர் போராட்டக்காரர்கள். (விரிவான தகவல்களுக்கு புதிய விடியல் 2019, பிப்ரவரி 16&28 இதழை காணவும்).

தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டம் ஏப்ரல் மாதம் புத்தெழுச்சியை கண்டது. ஏப்ரல் 6ல் தலைநகர் கார்த்தூமில் உள்ள இராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அதிபர் பதவியை விட்டும் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தீர்க்கமாக உரைத்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இராணுவத்தினரும் இறங்க காட்சிகள் மாறின. அதிபர் உமர் பதவியை விட்டும் செல்ல வேண்டும் என்றார் இராணுவ தளபதி. ஏப்ரல் 10 அன்று அதிபர் உமர் அல் பஷீரை பதவியில் இருந்தும் நீக்குவதாக அறிவித்த இராணுவ தளபதி ஆவாத் இப்னு அவ்ஃப் தலைமையிலான இராணுவ கவுன்சில், இரண்டாண்டுகளுக்கு இந்த இடைக்கால அரசாங்கம் ஆட்சி செய்யும், மூன்று மாதங்களுக்கு நாட்டில் அவசர நிலை அமலில் இருக்கும் என்று அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது. தாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல என்றும் மக்களாட்சியே தங்களின் கோரிக்கை என்றும் கூறி மக்கள் போராட்டங்களை தொடர்ந்தனர். அதிபர் உமரை காப்பாற்றும் நோக்கிலேயே இராணுவம் அவரை பதவியில் இருந்தும் நீக்கியது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.