ஆப்பிள் நிறுவன அதிகாரி டிம் குக் 12 கோடி டாலர் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு!

0
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் தனது 12 கோடி டாலர் சொத்து முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் அறக்கட்டளைக்கு தனது சொத்துக்களை வழங்கிய அமெரிக்க கொடை வள்ளல்களின் பட்டியலில் டிம் குக் (54) இணைந்துள்ளார். ஏற்கனவே, தொழிலதிபர் வாரன் பஃபெட், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
இது குறித்து கூறியுள்ள டிம் குக், “நீங்கள் குளத்தில் கூலாங்கல்லாக இருக்க வேண்டுமெனில், மாற்றத்திற்கான சுழல்களை உருவாக்க வேண்டும்” என்றார்.
அவர் தனது மனைவிக்கு 30.2 பில்லியன் டாலரை வழங்கியுள்ளார். அவருடைய மொத்த மதிப்பில் 37 சதவீதமாகும். மேலும், 10 வயது சிறுவனின் கல்லூரி படிப்புக்குப் பிறகு அறக்கட்டளைக்கு செல்லுமாறு திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை, ஆப்பில் இன்சைடர், தி வால் ஸ்ட்ரீட், ஃபார்ச்சூன் உள்ளிட்ட பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

Comments are closed.