ஆயுத பயிற்சி எடுக்கும் பஜ்ரங்தள் அமைப்பினர்

0

உத்திர பிரதேசத்தில் வலதுசாரி இந்துத்வ அமைப்பான பஜ்ரங்தள் தனது தொண்டர்களுக்கு லத்தி, கத்தி துப்பாக்கி முதலின கொண்டு ஆயுதப்பயிற்சி கொடுத்து வருகின்றது.

சமீபத்தில் இத்தகைய முகாம் அயோத்தியில் நடத்தப்பட்டது. இதனை போன்ற முகாம்கள் ஜூன் 5 ஆம் தேதிவரை சுல்தான்பூர், கோரக்பூர், பிலிபிட், நொய்டா, ஃபதெஹ்பூர் போன்ற இடங்களில் நடைபெறும் என்று பஜ்ரங்தள் அறிவித்துள்ளது.

இந்த முகாம்மில் தொப்பி அணிந்த ஒருவரை பஜ்ரங்தள் அமைப்பினர் சுட்டுக்கொல்வதாக ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் தேர்தலை ஒட்டி மக்களை பிளவுபடுத்தும் யுக்தி என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கலவர பின்னணிகளை கொண்ட பஜ்ரங்தள் அமைப்பு பசு பாதுகாப்பு இயக்கங்களையும் நடத்தி வருகின்றது. சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் பசுவை கடத்தியதாக சந்தேகித்து ஒரு முஸ்லிம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.