ஆய்வு அறிஞரை தங்கள் அலுவலகத்தில் அடைத்து வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.

0

தலித் ஆய்வு அறிஞரான ரோஹித் வெமுலாவை தேச விரோதி என்றும் அவர் மீது ஆர்.எஸ்.எஸ். இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தொடர் தாக்குதலில் ஈடுபட்டும் அவரை பல்கலைகழகத்தில் இருந்தே நீக்கியும் தற்கொலைக்கு தூண்டினர் ஜாதிய வன்முறையாளர்கள். அந்த வரிசையில் முஸஃபர்நகரில் அணில் யாதவ் என்கிற ஆய்வறிஞரை ஆர்.எஸ்.எஸ். கும்பல் தங்கள் அலுவலகத்தில் அடைத்து வைத்து அராஜகம் செய்துள்ளது. இந்த அணில் யாதவ் செப்டெம்பர் 2013 ஆண்டு முஸஃபர்நகர் மற்றும் ஷாம்லி பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியை ஆய்வு செய்ய அங்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை ரிஹாய் மன்ச் என்ற அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளதோடு “ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத சக்திகளின் தீய திட்டங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஆர்வலர்களை ஒடுக்கும் செயல்” என்று கண்டித்துள்ளது.

மேலும் ஆர்.எஸ்.எஸ். இன் முஸஃபர்நகர் அலுவகலம் தீவிரவாதத்தின் மையமாகவே திகழ்கிறது என்றும் ரிஹாய் மன்ச் தெரிவித்துள்ளது. இது குறித்து ரிஹாய் மன்ச் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் யாதவ் தெரிவிக்கையில், “ஜனவரி 27 ஆம் தேதி மதக்கலவரம் ஏற்பட்ட முஸஃபர்நகர் பகுதிக்கு தனது ஆய்வுக்காக சென்றவர் அணில் யாதவ். அவரை ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் அன்சாரி ரோடு பகுதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சிறைபிடித்து வைத்துள்ளனர். அங்கு அவரை ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் எனவும் அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும் அவரது அலைபேசியையும் அவரிடம் இருந்து பறித்து வைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் “அவர் தன்னுடைய அடையாள அட்டையை காண்பித்த பிறகும் அவரை நாகரீகமற்ற முறையில் வசை பாடியும் துன்புறுத்தியும் உள்ளனர். பல மணிநேரம் துன்புறுத்தலுக்கு பிறகு அவரின் அலைபேசியை அவரிடம் கொடுத்துள்ளனர்.” என்றும் இதனை செய்தவர்கள் “நீரஜ் ஷர்மா, ரம்விர் சிங், அஷுடோஷ், அனுபவ் ஷர்மா மற்றும் மேலும் இரண்டு பேர்” என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.