ஆரோக்கிய சேது ஆப்-ஐ கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் -முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா

0

கொரோனா அறிகுறி குறித்து அறிய ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய பாஜக அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கும் வகையில் அந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி, 5 கோடிக்கும் அதிகமானோரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

ரயில், விமான பயணிகள் இதனை கட்டாயம் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று பாஜக அரசு கூறியுள்ளது. வட மாநிலத்தின் சில பகுதிகளில் இந்த செயலியை டவுன்லோட் செய்யாதவர்களிடன் காவல்துறை அபராதம் விதித்து வருகிறது.

இந்த நிலையில், ஆரோக்கிய சேது செயலியில் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் இது தனிநபரை உளவு பார்க்கும் செயலி என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். மேலும் இதனை பயன்படுத்தும் பொதுமக்களுடைய தகவல்களின் பாதுகாப்பு குறித்து நிபுணர்கள் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ராகுல் காந்தியின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்த பாஜக அரசு, இந்த செயலி முற்றிலும் பாதுகாப்பானது என்றும் 180 நாட்களில் செயலியின் சர்வர்களிலிருந்து பொதுமக்களின் தகவல்கள் தானாக மறைந்துவிடும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள தகவல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் குழுவின் தலைவரான நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, “ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் என்றும் எந்த சட்டத்தின்படி இதனை கட்டாயப்படுத்த முடியும். அதாவது, உரிய சட்டம் எதுவும் இல்லாத நிலையில் எப்படி அதனை கட்டாயமாக்க முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.