ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தன்னை கொடுமைப் படுத்தியாதாக முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் போலீசில் புகார்

0

கேரளாவில் ஏழு வயது முதலே தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு படுத்தி வந்த விஷ்ணு என்பவர், தன்னை ஒரு மாத காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியாக காவல்துறையில் புகாரளித்துள்ளர்.

கேரளா மாநிலம் கண்ணூரில் CPM கட்சித் தொண்டர் ஒருவரது கொலையில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவர் குறித்து காவல்துறையில் தான் புகாரளித்ததாக கூறி தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். 25 வயது நிரம்பிய திருவனந்தபுரத்தை சேர்ந்தவரான விஷ்ணு, தன்னை கொடுமைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். மூத்த உறுப்பினர்கள் தன்னிடம் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதிப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்வதற்கு காரணம் கண்ணூர் மாவட்ட CPM கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராஜன் என்று அவர்கள் எழுதிப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது புகாரில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 22 வரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் தான் சிறைவைக்கப் பட்டிருந்தேன் என்றும் அதன் பின்னர் அவர்களது பிடியில் இருந்து தான் தப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் பல ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கும் பல எடுத்துச் செல்லப்பட்டதாகவும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் உள்ள பல சங் பரிவார தலைவர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படதாகவும் தெரிவித்துள்ளார். அங்கே பல்வேறு வகையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தான் துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த துன்புறுத்தல்கள் அனைத்தும் அப்பகுதி ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கண்ணன் என்பவர் CPM கட்சி தொண்டர் தனராஜ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனக்கு நேரத்து என்று கூறியுள்ளார்.

தான் துன்புறுத்தப்படும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜெயராஜனுக்கும் தனக்குமான தொடர்பு குறித்து விசாரித்தனர் என்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு தான் தான் காரணம் என்று அவர்கள் தன்னை குற்றம் சாட்டினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனை தான் மறுத்த போது அவர்கள் பல மணி நேரங்கள் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். அவர்களுடன் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் உள்ள பலரும் சேர்ந்து தன்னை துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வீடியோவில் வாக்குமூலம் கொடுக்குமாறு தான் வற்புறுத்தப் பட்டதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தன்னை வற்புறுத்தி அவர்கள் பெற்ற தற்கொலைக் கடிதம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கிரணிடம் இருப்பதாகவும், தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடலில் எரிந்துவிடுவதாக மிரட்டினார்கள் என்றும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ். இன் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பிய போது தான் அவர்களால் ஒதுக்கப் பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருடன் சேர்ந்து அட்டிங்கள்லில் உள்ள பெந்தேகொஸ்த் வழிபாட்டு அரங்கில் கல்லெறி சம்பவத்தில் தான் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பி.கோபாலன்குட்டி, விஷ்ணு ஆர்.எஸ்.எ.ஸ் இயக்கத்தில் தொடர்புடையவர் தான் என்றும் அவர் பல நேரங்களில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தங்கியுள்ளார் என்றும் அவரது குடும்ப நிலையை கணக்கில் கொண்டு அவர் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார் என்றும் மேலும் பல சமயங்களில் அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளார் என்றும் ஆனால் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஆதாரமற்றது என்று கூறியுள்ளார். மேலும் விஷ்ணுவின் புகாரானது சில குழுக்களால் வேறு பல காரணங்களுக்காக எழுதப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Comments are closed.