ஆர்எஸ்எஸ் கலவர கும்பல் மீது நடவடிக்கை; பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள்

0

உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் காவல்துறையினருக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார குண்டர்களுக்கும் இடையேயான மோதலின் விளைவாக உத்திர பிரதேச பாஜக எம்.பி. உட்பட பல பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது (பார்க்க செய்தி). காவல்துறையின் இந்த நடவடிக்கையால், பாஜக தரப்பினர் அடைத்த இருந்த பெரும் கலவரம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கலவரத்தை தவிர்த்த மற்றும் சங்க பரிவார அமைப்பினர் மீது நடவடிக்கை எடுத்த சஹாரான்பூர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் லவ் குமார் மற்றும் ஆக்ரா பகுதி மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரிந்தர் சிங் ஆகியோரை அவர்களின் தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்துள்ளது ஆதியநாத் அரசு.

காவல்துறை அதிகாரிகள் குமார் மற்றும் சிங் மீதான இந்த நடவடிக்கை, உத்திர பிரதேச எம்.பி. சஞ்சீவ் பலியான் தலைமையிலான பாஜக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. க்கள் குழு ஒன்று அதித்யனாத்தை சந்தித்து இந்த இரு காவல்துறை அதிகாரிகள் குறித்து புகாரளித்த சில மணி நேரங்களில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்களின் பணியிட மாற்று உத்தரவு கடந்த புதன் கிழமை வெளியாகியுள்ளது.

முன்னதாக சட்டவிரோதமான ஊர்வலத்தை சர்ச்சைக்குரிய பகுதி வழியே எடுத்துச் சென்றதற்கும், மக்களை வன்முறையில் இறங்க தூண்டியதற்கும் பாஜக எம்.பி. ராகவ் லகன்பால் மீது லவ் குமார் வழக்கு பதிவு செய்திருந்தார். இதன் காரணமாக காவல்துறை அதிகாரி லவ் குமாரின் வீடு அடித்து சேதப்படுத்தப்பட்டது. மேலும் ஷரன்புரில் உள்ள பல தனியார் சொத்துகளும் இந்த சம்பவத்தை தொடர்ந்த வன்முறையில் சூறையாடப்பட்டது.

அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுகின்றோம் என்கிற பெயரில் லகன்பால் தலைமையிலான இந்த ஊர்வலம் சஹாரன்புரில் உள்ள தடை ஊர்வலத்திற்கு செய்யப்பட்ட பகுதியான சதக் துத்லி கிராமம் வழியாக காவல்துறை அனுமதியின்றியும் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான தலித் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்படும் என்று எதிர்பார்த்த லவ் குமார் அந்த ஊர்வலம் அப்பகுதி வழியாக செல்வதற்கு தடை விதித்தார். இந்த சம்பவத்தின் போதே காவல்துறை அதிகாரி லவ் குமார் அவரது பணியில் இருந்து நீக்கப்படுவார் என்று லகன்பால் வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து லகன்பால் கூறுகையில், “காவல்துறை அதிகாரி லவ் குமார் சிறந்த அதிகாரி எனில் அவர் எந்தெந்த வீடுகளில் இருந்து தங்கள் கூட்டம் மீது கல்லெறியப்பட்டது என்று கண்டுபிடித்திருக்க வேண்டும் என்றும் தங்களது கூட்டத்திற்கு அவ்வழியே செல்ல அனுமதி கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் இதற்கு திறமையற்றவர், அதனால் அவர் அவரது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று லகன்பால் கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு கூடியிருந்த கும்பல் லகன்பாலின் வீட்டை அடித்து நொறுக்கியது. மேலும் அவரது கும்பத்தினரும் அந்த கும்பலால் மிரட்டப்பட்டுள்ளனர்.

பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்திய கலவரத்தை தொடர்ந்து பாஜக தலைவர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட வன்முறையாளர்களை லவ் குமார் கைது செய்துள்ளார். மேலும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பலரும் இவரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லவ் குமாரின் பணியிடமாற்ற உத்தரவு குறித்து லகன்பால் கருத்து தெரிவிக்கையில், தான் அதித்யனாத்தை சந்தித்ததாகவும் சஹாரான்புரில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் காவல்துறை அதிகாரி லவ் குமார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விவரித்ததாகவும் அதனையடுத்து லவ் குமார் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் முஹம்மத் சஃபகத் கமாலும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தற்போது சஹாரான்புரில் அமைதி நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பணியிடமாற்றத்தை தொடர்ந்து சிறையில் உள்ள பாஜகவினரை சந்தித்த லகன்பால் அவர்கள் மீது தொடர்ச்சியான காவல்துறை நடவடிக்கைள் எடுக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார். மேலும் இந்த கலவரம் தொடர்பாக வழக்கு பதவு செய்யப்பட்டுள்ள சுமார் 200  பேர் மீதும் எந்த ஒரு காவல்துறை நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வழக்கு காவல்துறை குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது தலைமறைவாக உள்ள பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் கும்பார் அதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கயை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். லவ் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்குப் பிறகு தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை காவல்துறை நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘எங்கள் தொண்டர்களில் பெரும்பாலானோர் சஹாரான்புரை விட்டு வெளியேறி தலைமறைவாகியிருந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் சஹாரான்பூர் திரும்புகின்றனர். நாங்கள் இப்போது நிம்மதியாக உள்ளோம். இனி சிறையில் இருக்கும் எண்களின் தொண்டர்களை வெளிக்கொண்டு வருவதே எங்களது முதல் வேலை” என்று கும்பார் தெரிவித்துள்ளார்.

லவ் குமாரைப் போன்று ஆக்ரா பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் பிரிதிந்தர் சிங் மீதும் அவர் பாஜக, ஆர்எஸ்எஸ், மற்றும் விஹெச்பி குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்த காரணத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சங்க்பரிவார வன்முறை கும்பல் கடந்த ஏப்ரல் 22  ஆம் தேதி சாதர் பஜார் காவல் நிலையத்தை தாக்கி அங்கிருந்த காவல்துறையினர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர். மேலும் அவர்கள் காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பஜ்ரங்தள் குண்டர்களை சிறையை உடைத்து விடுவிக்கவும் முயற்சி செய்துள்ளனர். (பார்க்க செய்தி) முன்னதாக இந்த குண்டர்கள் அப்பகுதி முஸ்லிம் மளிகைக் கடை உரிமையார்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வன்முறையாளர்கள் பஜ்ரங்தள் அமைப்பினரை விடுவிக்க வேண்டும் என்றும் மாறாக அவர்கள் மீது புகாரளித்த முஸ்லிம் மளிகை கடை உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று கூறி காவல்துறையின் வாகனம் ஒன்றிற்கும் தீவைத்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அதில் ஈடுபட்ட 14 பஜ்ரங்தள்  குண்டர்கள் மீது சிங் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இந்த வன்முறை குறித்த விசாரணையை அவர் முடிப்பதற்கு முன்பாகவே அவரது பணியிடமாற்றம் தொடர்பாக உத்தரவை பிறப்பித்துள்ளது ஆதித்யநாத் அரசு. மேலும் இவரது பணியிட மாற்ற உத்தரவு வருவதற்கு முன்பாகவே அது தொடர்பாக பாஜகவினருக்கு தகவல் கிடைத்து விட்டது என்று கூறப்படுகிறது. இந்த கைது சம்பவத்தால் கோபமடைந்த பாஜக, வி.ஹச்.பி., பஜ்ரங்தள் கும்பல் உத்திர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவ்ரியாவை சந்தித்த போது அதனை பற்றியும் அவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் மறுநாள் செய்தித்தாளை பாருங்கள் என்றும் ஏப்ரல் 26 ஆம் தேதி அவர் தெரிவித்துள்ளார். தற்போது பணிஇடமாற்றம் செய்யப்பட்ட சிங்கிற்கு புதிய பணி இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவல் நிலையம் மீதான தாக்குதல் வழக்கு ஆக்ரா காவல்துறையினரிடம் இருந்து பெறப்பட்டு மதுரா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தாக்குதல் சம்பவத்திலும் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது இந்திய காவல்துறை சங்கத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகள் இந்துத்வா கும்பலால் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் அவர்கள் கவநித்து வருகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உத்திர பிரதேசின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அதித்யநாத் அரசில், காவி உடுப்பினர்களுக்கு காக்கிச் சட்டைகளை தாக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்திய சுதந்திரத்திற்கு பிந்தைய நாட்களில் காவலர்கள் இவ்வாறு எங்குமே நடத்தப்பட்டது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.