ஆர்எஸ்எஸ் கிளைகளாக மாற்றப்பட இருக்கும் ஹரியானா அரசு உடற்பயிற்சிக் கூடங்கள்

0

ஆர்எஸ்எஸ் கிளைகளாக மாற்றப்பட இருக்கும் ஹரியானா அரசு உடற்பயிற்சிக் கூடங்கள்

ஹரியானா அரசு அதன் பல துறைகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை புகுத்துவதாக அதன் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் வேலையில் அதனை உறுதி செய்தது போல் உள்ளது ஹரியான விவசாயத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் தங்கரின் சமீபத்திய அறிவிப்பு.

ஒரு உடற்பயிர்ச்சிக் கூடம் ஒன்றின் துவக்கவிழாவில் பேசிய தங்கர், இது போன்ற உடற்பயிர்ச்சிக் கூடங்கள் ஆர்எஸ்எஸ் சாகாக்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் இரண்டு ஏக்கர் அரசு நிலத்தில் இது போன்ற உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு அதில் யோகா, மல்யுத்தம், கைப்பந்து, பளுதூக்குதல் மற்றும் கபடி ஆகியன பயிற்ருவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹரியானா கல்வித்துறை அமைச்சர் ராம் பிளாஸ் ஷர்மா, உடற்பயிற்சிக் கூடங்கள் ஆர்எஸ்எஸ் கிளைகளாகவும் இயங்கும் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்தை விவசாயத்துறை அமைச்சர் தங்கரிடம் கேட்ட போது அக்கருத்தை உறுதி செய்யும் வகையில் அரசு நிதியுதவி வழங்கப்படும் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆர்எஸ்எஸ் கிளைகளாக இயங்கும் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பல பாஜக அமைச்சர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இந்த கருத்துக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ கரன் சிங் தலால், “கல்வித்துறை அமைச்சர் அரசு உடற்பயிற்சிக் கூடங்களில் ஆர்எஸ்எஸ் சாஹாக்கள் நடக்கும் என்று கூறினால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பரப்ப அரசு நிதியை பயன்படுத்துவது ஒரு கிரிமினல் குற்றச்செயல்.” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரவீன் அட்டேரி, “இந்த உடற்பயிற்சிக்கூடங்கள் அரசின் சொத்துக்கள். ஒரு தனியார் இயக்கம் எப்படி அரசுக்கு சொந்தமான இடங்களை தங்களது கொள்கைகளை பரப்ப பயன்படுத்தமுடியும். மாநில அரசு, தாங்கள் அரசு நிலத்தை ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பரப்ப பயன்படுத்த முடியும் என்று நினைத்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. “ என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply