ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆசிகளுக்காக காத்திருக்கிறேன்: எடியூரப்பா

0

கர்நாடகாவில் ஆட்சியமைக்க உள்ள மாநில பா.ஜ. தலைவர் எடியூரப்பா, தான் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆசிகளுக்கு காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

கர்நாடக மாநில பாஜக தலைவரும், மூன்று முறை முதல்வருமான எடியூரப்பா, முதலமைச்சர் பதவியேற்கும் நிலையில் உள்ளார். அதேசமயம், டெல்லி தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு வரவேண்டியுள்ளது.

‘நான் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களின் ஆசிகளைப் பெறுவதற்காக இங்கே வந்தேன். டெல்லி தலைமையின் அறிவுறுத்தல்களுக்காக காத்துக் கொண்டுள்ளோம். அதைப் பெற்றவுடன், சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, கவர்னர் மாளிகைக்கு செல்வோம்’ என்று கூறியுள்ளார் எடியூரப்பா.

Comments are closed.