ஆர்எஸ்எஸ் தலைவர் நினைவிடத்திற்கு சுற்றுலாத்துறை அந்தஸ்து வழங்கிய மகாராஷ்டிர அரசு

0

ஆர்எஸ்எஸ் தலைவர் நினைவிடத்திற்கு சுற்றுலாத்துறை அந்தஸ்து வழங்கிய மகாராஷ்டிர அரசு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவரின் நினைவிடத்திற்கு மகாராஷ்டிர அரசு சுற்றுலாத்தளம் அந்தஸ்து வழங்கியுள்ளது. நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அமைந்திருக்கும் ஸ்ம்ருதி மந்திர் என்று அழைக்கப்படும் அந்த நினைவிடத்திற்கு சுற்றுலாத்தளம் அந்தஸ்து வழங்கி மாவட்ட கலக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நினைவிடத்தை சுற்றுலாத்தளமாக மாற்ற மகாராஷ்டிர சுற்றுலாத்துறை பரிந்துரை செய்ததின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த இடத்தை சுற்றுலாத்தளமாக அறிவிக்க வேண்டும் என்று நாக்பூர் பாஜக துணைத்தலைவர் பூஷன் தாவ்டே கூறியிருந்தார். இதனை மாவட்ட திட்டக்குழு ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விஜயதசமி பொழுதில் அதிகப்படியான மக்கள் அங்கு வருவதால் அதற்கு சுற்றுலாதளம் அந்தஸ்து வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கேஷவ் பலிராம் ஹெட்கேவர், 1925 ஆம் ஆண்டு மேலும் நான்குபேருடன் இணைந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர்.1940 ஆம் ஆண்டு உயிரிழந்த இவரின் இறுதிச்சடங்கு ரேஷிம்பாகில் நடத்தப்பட்டது. இங்கு தான் இவருக்கு பின் ஆர்எஸ்எஸ் தலைமையை ஏற்ற கோல்வாக்கரின் இறுதிச் சடங்கும் நடத்தப்பட்டது. தற்போது இவ்விடத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக நாக்பூர் முனிபால் கார்பரேசன் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.