ஆர்எஸ்எஸ் தலைவர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை: பணமதிப்பிழப்பை தொடர்ந்து 17  கோடி டெபாசிட்

0

டில்லியில் ஆர்எஸ்எஸ் தலைவரான குல்புஷன் அஹுஜாவிற்கு சொந்தமான அபுஜாசன்ஸ் சால்வாலே நிறுவனம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500  மற்றும் 1000  ரூபாய் தாள்களில் சுமார் 17 கோடி ரூபாய் மத்திபிலான பணத்தை வங்கியல் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் டில்லி பகுதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் ஆவணங்களின் அடிப்படையில் இந்த நிறுவனத்திற்கு இன்னும் மூன்று இயக்குனர்கள் உள்ளனர். அவர்கள் அஹுஜாவின் இரண்டு மகன்கள் புவன் மற்றும் கரன், மற்றும் அவரது மருமகள் நிதி ஆகியோர் ஆவர்.

இவர்கள் கடந்த மாத இறுதியில், ஆறுகோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கடந்த டிசெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பிரமரின் கரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் செலுத்தியுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தனது சிறுவயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் இல் உறுப்பினராக உள்ளவர் என்றும் இவரது குடும்பமும் ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து அஹுஜாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அதற்கு அவர் பதிலளிக்க மருத்திவிட்டார். மேலும் வருமான வரித்துறையினரும் இது தொடர்பாகதங்கள் கருத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில், அஹுஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வருமான வரித்துறை சட்டப்பிரிவு 132 இன் படி தீவிர பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனை சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனை குறித்து கணினி தகவல் மூலம் கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

வருமான வரித்துரையின் இந்த சட்டப்பிரிவின் படி வருமான வரித்துறை அதிகாரி யாரேனும் ஒருவர் அவரிடத்தில் முக்கியமான ஆதாரங்கள் வைத்திருப்பதாக கருத காரணங்கள் இருந்தால் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் எப்போது வேண்டுமானாலும் புகுந்து சோதனை நடத்த அனுமதி உள்ளது.

இந்த சோதனையின் மூலம் அஹுஜா அலுவலகத்தில் அவரது பண பரிவர்த்தனையை சரி செய்ய இருந்து பின் தேதியிட்ட போலியான விற்பனை ரசீதுகளை கண்டெடுத்ததாகவும் அத்துடன் புது ரூபாய் தாள்களை அங்கு கண்டெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சோதனையின் மூலம் சீல் வைக்கப்பட்ட பல லாக்கர்களில் உள்ள ஆவணங்களை இன்னும் சோதனையிடவில்லை என்று தெரிகிறது. இந்த சோதனையை தொடர்ந்தே அந்நிறுவனம் மொத்தமுள்ள 17  கோடி ரூபாயில் ஒரு பகுதியான 6 கோடி ரூபாயை PMGKY திட்டத்தின் கீழ் செலுத்த முன் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் செலுத்தும் பணத்திற்கு 30% வரி மற்றும் அந்த வரிக்கு 33% வரி மற்றும் 10%  அபராதம் ஆகியவற்றை செலுத்தவேண்டும். மேலும் இதில் செலுத்தப்பட்ட பணம் நான்கு வருடங்களுக்கு திரும்பப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.