ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரை கைது செய்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட போலீசார்

0

மத்திய பிரதேசம் பலகாட் பகுதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் யாதவ். இவரை கடந்த செப்டெம்பர் 25 ஆம் தேதி சிறுபான்மை சமூகத்தினர் குறித்து மோசமான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து இரு பிரிவினர்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்ட முயன்றதற்காக கைது செய்யப்பட்டார்.

சாதர்புர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் யாதவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பலகாட் பகுதியில் இரண்டு வருடங்கள் முன் பணியமர்த்தியது. அப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ். சாகாக்களை நடத்துவதில் இருந்து சங்கபரிவாரத்தின் பல செயல்பாடுகளை இவர் நிர்வகித்து வந்துள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி இவர்கள் “ONI News Vananchal” என்கிற வாட்ஸ்அப் குழுமம் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பதிவுகளை வழக்கமாக பதிவு செய்து வந்துள்ளக தெரிகிறது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் நவாப் கான் என்கிற இளைஞர் பைஹார் காவல்நிலையத்தில் செப்டெம்பர் 25 ஆம் தேதி புகாரளித்துள்ளர். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சுரேஷ் யாதவை கைது செய்துள்ளனர். இவரை காவல்துறையினர் கைது செய்யும் போது காவல்துரையினர்களிடம் இருந்து தப்பித்து அருகில் உள்ள “அசடி மருத்துக்கடை”யில் அடைக்கலம் புகுந்துள்ளார். ஆகவே போலீசார் அந்த மருந்துக் கடையில் நுழைந்து சுரேஷ் யாதவை பிடித்துச் சென்றுள்ளனர். மேலும் அவரது அலைபேசியையும் கைப்பற்றி சொதித்துள்ளனர். இதில் அவர் இரு சமூகத்திற்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை பகிர்ந்து வந்தது நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த கைதை அடுத்து உடனடியாக சுரேஷ் யாதவ் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டாலும் காவல் நிலையத்தை விட்டு வெளியேற அவர் மறுத்துள்ளார்.இதனையடுத்து காவல் நிலையத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சூழ்துள்ளனர். இதில் தயிரிமடைந்த சுரேஷ் யாதவ் காவல்துறையினரை மிரட்டத் தொடங்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்து வெறும் நான்கு மணி நேரத்திற்குள் பைஹார் காவல் நிலையத்தில் ASP ராஜேஷ் ஷர்மா, ஜியா உல் ஹக், துணை ஆய்வாளர், அணில் அஜ்மீரியா, உதவி துணை ஆய்வாளர் சுரேஷ் விஜயவர் மற்றும் மற்றொரு காவலர் மீது யாதவ் புகாரளித்துள்ளர். பின்னர் மறுநாள் காலை 7  மணிக்கு இதே காவலர்கள் மீது மருந்து கடை வைத்திருந்த சுவாமி பிரசாத் அசடி மூலம் மற்றொரு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாங்கள் கைது செய்த சுரேஷ் யாதவ் பல மேலிட தொடர்பு உள்ளவர் என்றும் இந்த கைதினால் தங்களது நிலைமை மோசமாகியுள்ளதையும் அறிந்த இந்த காவலர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த காவலர்கள் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, கொள்ளை, தீய நோக்கத்துடன் அத்துமீறி நுழைவது, தீவைப்பு, வேண்டுமென்றே காயம் ஏற்ப்படுத்துவது ஆகிய வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து மத்தய பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங், சுரேஷ் யாதவ் ஆர்.எஸ்.எஸ். அனைப்பை சேர்ந்தவர் என்பதை அறியாததால் காவல் துறையினர் அவரை தாக்கிவிட்டனர் என்றும் இனி இது போன்று நடக்காமல் இருக்க ஒவ்வொரு பகுதி காவல்துறையினர்களுக்கும் அப்பகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பெயர் பட்டியல் அனைத்து காவல்துறைக்கும் வழங்கப்படும் என்றும் இது மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுத்ததால் காவல்துறையினர் தண்டிக்கப்படுவது மக்கள் மனதில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான திக்விஜய் சிங், இது தான் உங்கள் நல்லாட்சியா என்றும் இது போன்ற நடவடிக்கைகள் மூலமாகத் தான் மோடி முஸ்லிம்களை வலிமைப்படுத்த நினைக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் மோடி தனது உரை ஒன்றில் இந்நாட்டு முஸ்லிம்களை வலிமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற நிலை நீடித்தால் காவல்துறையினர் எவ்வாறு குற்றம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நீங்கள் கூறுவது போல முஸ்லிம்களின் நலனில் உண்மையில் அக்கறை கொண்டிருந்தாள், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கபப்ட வேண்டும், அது சிவராஜ் சவ்ஹானாக இருந்தாலும் சரி காவல்துறை உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சரி” என்று கூறியுள்ளார். இல்லையென்றால் இதுவும் உங்களது மற்றொரு ஜூம்லாக்களில் ஒன்றாக நாங்கள் கருத வேண்டிஇருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.