ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் முதன்மை பயங்கரவாத அமைப்பு

0

மறைந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி ஹேமந்த் கர்கரேயை நினைவு கூறும் விழாவில் “ஆர்.எஸ்.எஸ். தான்இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாத அமைப்பு என்று ” முன்னாள் காவல் துறை அதிகாரி, எஸ்.எம் முஷ்ரிஃப் கூறியுள்ளார்.கிட்டத்தட்ட 13 தீவிரவாத வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் பஜ்ரங் தள் அமைப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இது 17 ஆக உயரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஆர்.எஸ்.எஸ். இன் தீவிரவாத தாக்குதல்களில் 2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு , சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு 2006 & 2008 மலேகான் குண்டுவெடிப்பு ஆகியவை அடங்கும்” என்று கூறியுள்ளார்.

“இந்தக் காவி பயங்கரவாதிற்கு ஆட்சில் எந்த அரசு இருந்தாலும் தடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத அமைப்பிற்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதற்குக்கவலை இல்லை. அதற்கு அமைப்பு முறைத் தன முக்கியம், அது பிராமணிய அமைப்பு முறை. இதில் பிராமணிய என்றகூற்றுப் பிராமணர்களைக் குறிப்பதை விட அடுத்தவர்களை ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கும் பிராமணிய மனோபாவத்தையேகுறிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

சமீபகாலமாகத்தான் சகிப்புத்தன்மையற்ற  சூழ்நிலை நாட்டில் நிலவுவதாகக் கூறப்படுவதைத் தான் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் இந்த நிலை வெகு காலமாகவே இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர் மிகத்தீவிரமான சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. தற்பொழுது மட்டும் ஏன் இது பெருத்துப் படுத்தப்படுகிறது என்றுபுரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்  புத்தகம் மூலமாக நாட்டில் உளவுத்துறையே ஹேமந்த் கர்கறேவின் கொலையின் சூத்திரதாரி எனவும் அவர் தீவிரவாதசெயல்களில் இந்துத்துவா அமைப்புகளின் பங்கினை விசாரணை செய்ததாலேயே 2008 மும்பை தாக்குதல் மூலமாகக்கொல்லப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவரது கொலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையினைவெளிக்கொணர மக்கள் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரது கொலையில் உளவுத்துறையின் கைகள் இருப்பதைச் சுட்டிக்காட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தும்அதை நிரூபணம் செய்ய எடுத்த எல்லா முயற்சிகளும் தொர்கடிப்பட்டு விட்டன என்று கூறினார். சுதந்திரமானவிசாரநிக்கான நாம் எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டன என்றும் மிகப்பெரியதொரு மக்கள் ஏற்படுத்தாமல்ஒழிய இதனை நாம் சாதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எஸ்.எம்.முஸ்ரிப் மஹாரஸ்டிரா காவல் துரையின் இன்ஸ்பெக்டர் ஜெனெரலாகப் பணியாற்றியவர். கர்கறேயின்கொலையில் இருக்கும் உண்மைய்களை Who killed Karkare என்ற புத்தகம் மூலம் உலகத்திற்கு எடுத்துரைத்தவர்.
அவர் புத்தகத்தின் சாராம்சங்களை இந்தப் பதிவில் காணலாம்.

Comments are closed.