ஆர்.எஸ்.எஸ் இந்து மதத்தை அழித்துவிடும் – ஹிந்தி கவிஞர் அசோக் வாஜ்பேயி

0

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமிய மார்க்கத்தை எதுவும் செய்திட முடியாது, ஆனால் நிச்சயமாக இந்து மத்தத்தைஅழித்துவிடும் என்று ஹிந்தி கவிஞர் அசோக் வாஜ்பேயி கூறியுள்ளார்.

அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு காந்தி அமைதி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு பொது விரிவுரையில் பேசியபொழுது மகாத்மா காந்தியின் “எல்லா மதங்களும் உண்மை, ஆனால் எதுவும் குறையற்றது இல்லை ” என்பதை மேற்கோள்காட்டி, இதன் மூலம் காந்தி அனைத்து மதங்களும் ஒன்றிடம் இருந்து ஒன்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைகுறிப்பிடுகிறார் என்று கூறினார். “கோடிக்கணக்கான கடவுள்களையும் 700 க்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்டபன்முகத்தன்மை உடைய நாடு நம் நாடு. என்னை இப்போது துரோகி என்று கூறுகிறார்கள். அப்படி நான் ஒரு துரோகியாகஇருந்தால் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தற்பொழுதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் இஸ்லாத்திற்குஆர்.எஸ்.எஸ். யினால் எவ்வாறு தீங்கு விளைவிக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இந்து மத்தத்தைஅது அழித்துவிடும்” என்று கூறியுள்ளார்.

மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்த இவர் இந்தியாவில் அதிகரித்து வரும்சகிப்புத்தன்மையற்ற சூழ்நிலையைக் கண்டிக்கும் விதமாக அவரது சாகித்திய அகாடமி விருதினை திருப்பி அளித்ததற்காகசங்பரிவார் கும்பலினால் தாக்கப்பட்டார்.

நடிகர் அமீர்கானின் கருத்து குறித்து வினவிய போது, ஒரு அரசிற்கும் தேசத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தேசம்அரசை விட பெரியது. அரசிற்கு எதிராக ஆட்சேபம் தெரிவிப்பது தேசத்திற்கு எதிரானதாக ஆகிவிடாது ” என்று அவர்கூறியுள்ளார்

Comments are closed.