ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி

0

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள், காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்தக் கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ” இந்திய நாட்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் விஷ பூச்சியாக உள்ளது. மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டாக்க நினைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.

இஸ்லாமிய மக்கள் மீது நடத்தும் தாக்குதல் அதிகரித்து விட்டது. தேசம் முழுவதும் உள்ள 15 கோடி இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறது. இவ்வாறு நடக்க நாம் அனுமதிக்க கூடாது. இதற்கு எதிரான போராட்டத்தை கொண்டு செல்வோம்” என தெரிவித்தார்.

Comments are closed.