ஆர்.எஸ்.எஸ் தீவரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை

0

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தவர் சந்திரகாந்த் சர்மா. இவர் தனது காப்பாளருடன் கிஷ்த்துவார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒருவர் சந்திரகாந்த் சர்மாவின் காப்பாளரை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இந்த திடீர் தாக்குதலில் சர்மாவின் மெய்க்காப்பாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சந்திரகாந்த் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Comments are closed.