ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலைவழக்கில் பா.ஜ.க. அமைப்பினர் மீது சந்தேகம்

0

பெங்களூர் சிவாஜிநகர் பகுதியின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பொறுப்புதாரரான ருத்ரேஷ் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இவரது கொலையைத் தொடர்ந்து இவரை வேறு சமூகத்ஹ்டை சேர்த்ந்தவர்கள் கொலை செய்துவிட்டனர் என்று கூறி பெரும் பெங்களூரிவில் பதற்றம் நிலவியது.

இவரது கொலை வழக்கு விசாரணையில் தற்போது இவர் முன் விரோதம் காரணமாக பா.ஜ.க வைச் சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகித்து வருகிறது.

பெங்களூர் சிவாஜிநகரில் விநாயகர் சதுர்த்தியின் போது வழக்கமாக ருத்ரேஷுடன் வேறு ஒருவரும் இணைந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது வழக்கம் என்றும் பின்னர் ருதேரேஷிர்கு பேரும் புகழும் கிடைக்கவே இந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பின்னர் மோதலாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ருத்ரேஷ் தனியாக இன்னும் விமர்ச்சையாக நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவருக்கு கட்சியில் செல்வாக்கு பெருகியிருக்கிறது. அதே நேரம் பல எதிரிகளையும் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறை சந்தேகிக்கும் அந்த நபர் ருத்ரேஷின் கொலையில் மறைமுகமாக ஈடுபட்டிருக்கலாம் அல்லது அவருக்கு கொலையாளிகள் யாரென்று தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்று காவல்துறை கூறியுள்ளது. மேலும் கூடிய விரைவில் அவரை கைது செய்து விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கொலை வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் இதனை செய்தவர்கள் கூலிப்படையினர் தான் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.