ஆர்.எஸ்.எஸ், பாஜகவில் இணைந்தால் உடனே ஜாமின்: CAA போராட்டக்காரர்களை மிரட்டும் NIA

0

பாஜகவில் இணைந்தால் உடனே ஜாமின் வழங்கங்பபடுவதாக சிஏஏ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குசென்ற சமூக செயற்பாட்டாளர் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பிரச்சாரம் பேற்கொண்டு வருகிறது. இத்தேர்தலில், சிஏஏ சட்டம் தொடர்பான கருத்துக்கள் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக செயற்பாட்டாளர் அகில் கோகாய், மத்திய பாஜக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். இவர் சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார்.

இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சிஏஏ-க்கு எதிராக போராடியவர்கள் ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜகவில் இணைந்தால் உடனடியாக ஜாமின் கிடைக்க NIA அதிகாரிகள் வாய்ப்பு தெரிவிக்கின்றனஎ. விசாரணை என்ற பெயரில் அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக சித்ரவதை செய்கின்றனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

Comments are closed.