ஆர்.எஸ்.எஸ் பாஜக கேரளாவில் வன்முறையை தூண்டுகிறது: CPI-M குற்றச்சாட்டு

0

கேரளாவில் LDF ஆட்சிக்கு வந்த பிறகு தங்களது தொண்டர்களில் ஆறு பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும் அதற்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என்று CPI-M கட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் வன்முறைகளுக்கு இடதுசாரி கட்சிகள் பலிகிடா ஆகியுள்ளனர் என்று CPI-M கட்சி தெரிவித்துள்ளது.

கண்ணூரில் கடந்த வியாழக்கிழமை CPI-M கட்சி அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் போது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இது போன்ற வன்முறை செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று CPI-M கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சீதாரம் யெச்சுரி ஆர்.எஸ்.எஸ். இன் திட்டமே இது போன்ற மதவாத பிரிவினை மற்றும் வன்முறைகள் மூலம் தங்களது அரசியல் களத்தை விரிவாக்கம் செய்வது தான் என்று கூறியுள்ளார்.

முன்னதாக கேரள ஆளுநர் பி.சதாசிவம் ஆர்.எஸ்.எஸ். பாஜக தொண்டர்கள் மீதான CPI-M தொண்டர்களின் வன்முறை அதிகரித்து வருகிறது என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக வின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளீதர் ராவ் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.