ஆறு மாத சிறையில் இருந்து வெளிவந்தும் இன்னும் அச்சத்தில் வாழும் மெளலவி

0

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹனீஃப். மெளலவியான இவர் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு மும்பை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இவர் ஐ.எஸ். அமைப்பிற்கு கேரளாவில் ஆள் சேர்த்தார் என்பது.

கேரளாவில் 21 இளைஞர்கள் காணாமல் போனதையடுத்து அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துவிட்டனர் என்று நம்பப்பட்டது. இதனையடுத்து அந்த இளைஞர்கள் ஒருவரின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இவரை கைது செய்து ஆறு மாத காலங்கள் சிறையில் தள்ளியது. ஆனால் இந்த புகாரை கொடுத்த அப்துல் மஜீத், தான் இந்த புகாரை ஹனிஃபிற்கு எதிராக தரவில்லை என்றும் தன்னிடம் NIA அவர்கள் தயார் செய்த புகாரில் கையெழுத்து வாங்கினர் என்றும் என்றும் அதன் அடிப்படையிலேயே ஹனிஃப் UAPA சட்டத்த்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ஹனிஃப் கூறுகையில், “நான் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 தேதி கைது செய்யப்பட்டேன். இரவு 9 மணியளவில் சாதாரண சீருடையில் இருந்த கேரளா காவல்துறையினர் பெரிங்காதூரில் உள்ள நான் பணியாற்றும் சலஃபி மசூதிக்கு வந்தனர். அபோது என்னை DYSP காண விரும்புவதாகக் கூறி என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் நான் கண்ணூர் காவல் நிலையத்தில் இரவு 10:30 மணியளவில் நிறுத்தப்பட்டேன். அங்கு பல மணி நேரங்கள் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக காணாமல் போன இளைஞர்களுடன் எனக்கிருந்த தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர் நான் அவர்களை ஐ.எஸ். இயக்கத்திற்கு சேர்த்து விட்டேனா என்பது குறித்தும் விசாரித்தனர்.

எனது தரப்பில் எந்த ஒரு தவறும் இல்லை என்பதனால் அவர்களது கேள்விக்கு நேர்மையாக பதிலளித்தேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “என்னுடைய பதில்களில் தனக்கு திருப்தி ஏற்ப்பட்டுள்ளதாக DYSP கூறினார். ஆனால் என் மீது மும்பையில் அப்துல் மஜீத் என்பவர் புகாரளித்த காரணத்தினால் மும்பை காவல்துறையினர் கண்ணூர் வந்து விசாரணை நடத்துவார்கள் என்று அவர் கூறினார். இரண்டு நாட்கள் கழித்து வந்த மும்பை காவல்துறையினர் என்னை அவர்கள் விசாரணைக்காக தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினர். மேலும் வெறும் விசரனைகாகவே நான் மும்பை அழைத்துச் செல்லப்படுவதாகவும் இது குறித்து கவலையடைய வேண்டாம் என்றும் உடனே எனக்காக ஒரு வழக்கறிஞரை ஏற்ப்பாடு செய்யுமாறும் அவர் கூறினார்.”என்று தெரிவித்துள்ளார்.

மும்பையில் தான் விசாரிக்கப்பட்டதை விவரித்த அவர் பின்னர் தன்னை NIA விசாரித்ததையும் அதன் பின் நீதிபதி வி.வி.பாட்டில் வழக்கறிஞர் மூலம் பிணை விண்ணப்பிக்க பரிந்துரை செய்ததையும் விளக்கியுள்ளார். தற்போது தனக்கு பிணை வழங்கப்பட்டாலும் இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் தான் எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினரால் அழைக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஹனிஃப் தான் காவல்துறையினால் விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதும் தன்னிடம் தொடர்பு வைத்துக்கொண்ட பலர் எவ்வாறு தன்னை விடு விலகிச் சென்றனர் என்றும் தனக்கு ஆதரவாக வெகு சொற்பமானவர்களே இருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆறு மாதம் சிறையில் கழிந்த ஹனிஃபின் நாட்கள் குறித்து தான் மிகவும் வருத்தப்படுவதாகவும் தனது குடும்பம் இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும் ஹனிஃபின் சகோதரர் சாகுல்ஹமீத் தெரிவித்துள்ளார். மேலும் தனது சகோதரனுக்கு நீதி வேண்டும் என்றும் அவர் சிறையில் கழித்த ஆறு மாதங்களை யாராலும் திருப்பி வழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.