இங்கிலாந்தில் வலுக்கும் மோடி எதிர்ப்பு

0

மோடியின் இங்கிலாந்து பயணத்திற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மூன்று நாள் பயணமாக இங்கிலாந்து செல்லும் மோடிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் பெருகி இருந்தது. 2002 குஜராத்தில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் ஷக்கில் தாவூத், சயீத் தாவூத் மற்றும் முஹம்மது அஸ்வத் என்ற லண்டனை சேர்ந்த மூன்று பேர் இந்துத்துவா கொலைவெறி குண்டர்களால் கொல்லப்பட்டனர். இந்த கொலைக்கு நியாயம் கேட்டும் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியும் மோடியின் வருகைக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி கார்பின் மோடி உடனான தனது சந்திப்பில் மனித உரிமை குறித்து விவாதிக்கப் போவதாக கூறியுள்ளார்.
பல இங்கிலாந்து எம்.பி.கள் இனப்படுகொலையில் இறந்தவர்களுக்கு நியாம் கேட்டுள்ளனர். அவாஸ் என்ற அமைப்பு மோடியின் வருகையை எதிர்த்து இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடத்தில் “Modi Not Welcome” என்ற வாசகத்துடன் உள்ள படத்தை ப்ரொஜெக்டர் மூலம் காட்டியது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமெரூன் எகிப்தின் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து தன்னை ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்ட சிசியை இங்கிலாந்திற்கு அழைத்ததும் இப்பொழுது மோடியை அழைத்திருப்பதும் டேவிட் கமெரூன் மீதான எதிர்ப்பை வலுப்பெற செய்துள்ளது.

Comments are closed.