இடஒதுக்கீடு கேட்ட ஜாட் இன மக்களின் வன்முறையில் கற்பழிக்கப்பட்ட பெண்கள்

0

பா.ஜ.க. ஆளும் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜாட் இன மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு வன்முறையில் ஈடுபட்டனர். இதில் அந்த மாநிலமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு வன்முறைகள் வெடித்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவமும் வரவழைக்கப்பட்டது.
தற்போது இந்த வன்முறையின் போது பல பெண்கள் வன்முறையாளர்களால் கற்பழிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹரியானா முர்த்தல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களில் இருந்து பெண்கள் வெளியே இழுத்து வரப்பட்டு அருகில் உள்ள வயல்களில் வைத்து கற்பழிக்கப்பட்டதாக தி ட்ரிபியூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவந்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இது வெறும் வதந்தி என்று கூறி வருகிறது மாநில பா.ஜ.க அரசு.

இந்த பாலியல் வன்முறையை நேரில் பார்த்தவர்கள் திங்கள் அதிகாலை குறைந்தது 10 பெண்களாவது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பார்கள் என்று கூறுகின்றனர். மேலும் மாநில அரசின் உயரதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இதனை பற்றி வெளியில் தெரிவிக்க வேண்டாம் எனவும், அப்படி தெரிவித்தால் அவர்களுக்கு தான் அவமானம் எனவும், நடந்ததை யாராலும் மாற்ற முடியாது எனவும் கூறியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த பாலியல் தாக்குதலில் 30 பேர் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது உறவினர்கள் வந்து கண்டெடுக்கும் வரை வயல் வரப்பிலேயே கிடந்ததாகவும் கூறப்படுகிறது, மேலும் நெடுஞ்சாலை ஓரம் கடை வைத்திருக்கும் ஒருவர் தனது கடைக்குள் அடைக்கலம் தேடி சில பெண்கள் ஒளிந்துகொண்டதாகவும் குறிபிட்டுள்ளார்.

அந்த கிராமத்து மக்கள் இது குறித்து தாங்கள் பேசப் போவது இல்லை என்றும், பேசினாலும் எந்த பயனும் இல்லை என்றும், அப்படியும் காவல்துறை வன்முறையாளர்களை காப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

நாட்டிலேயே பசு மாடுகளுக்கு பாதுகாப்பான மாநிலம் ஹரியானா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஹரியானா

Comments are closed.