இடைத்தேர்தல் முடிவுகள்

1

 

ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மஹாராஷ்டிராவின் இரண்டு தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்டின் ஒரு தொகுதி ஆகியவைக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

மஹாராஷ்டிராவின் டஸ்காவோன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.ஆர்.பாட்டீல் மரணித்த்தை தொடர்ந்து அங்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாட்டீலின் மனைவியான சுமன் பாட்டீல் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முக்கிய கட்சிகள் எதுவும் இத்தொகுதியில் தங்களின் வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாந்த்ரா கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாலா சாவந்த் மரணித்ததை தொடர்ந்து அங்கும் தேர்தல் நடைபெற்றது. அத்தொகுதியில் சாவந்த்தின் மனைவி திருப்தி சாவந்த் ஏறத்தாழ 19000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நாராயண் ரானேவை தோற்கடித்தார்.

சென்ற வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் ரானே தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாவின் தூரி தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் ஷிரோன்மணி அகாதி தளம் வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் அரவிந்த் கன்னா ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் ஷிரோன்மணி அகாதி தள வேட்பாளர் கோபிந்த் சிங் லோங்வால் 37501 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வரும் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலாவின் பேரன் சிமர் பரதாப் சிங் இத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பகவான்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மமதா ராகேஷ் பா.ஜ.க. வேட்பாளர் ராஜ்பால் சிங்கை ஏறத்தாழ 37000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இத்தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திரா ராகேஷ் மரணித்ததை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அவரின் மனைவியான மமதா காங்கிரஸ் சார்பாக இத்தேர்தலில் போட்டியிட்டார். இந்த வெற்றி மூலம், மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 36 இடங்களை கைப்பற்றி ஆளும் காங்கிரஸ் தனிப்பெரும் பெரும்பான்மையை பெற்றுள்ளது.

Discussion1 Comment

  1. MOHAMED MUSTHAK

    அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
    மேலே குறிப்பிட்டிருக்கும் செய்திகளை மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு உண்டான படங்களை போடுவது சிறந்தது. இதில் பாஜாக-விற்கு ஏறுமுகமா அல்லது தோழ்வியா என்பதை படத்தைக் கொண்டு அறியும் வண்ணம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    படம் பல கருத்துகளை கொடுக்கும்.
    வஸ்ஸலாம்