இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகம் பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர் – கூகிள்

0
இணையதளத்தை பயன்படுத்தும் உலக நாட்டினரில் இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. தங்கள் கணக்கின் பாஸ்வோர்ட் மாற்றம் செய்வது தொடர்பான தேடுதல்கள் கூகிளில் 20% அதிகரித்துள்ளது என்றும் தங்கள் கணக்கில் இரண்டடுக்கு பாதுகாப்பை (Two Step Verification) ஏற்படுத்துவது எப்படி என்பது தொடர்பான தேடுதல்கள் 97% அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஐந்து மில்லியன் பயனாளர்கள் கூகிளில் புதிதாக இணைகிறார்கள் என்றும் இது 2018-2019 இல் 500 மில்லியன் இணைக்கப்பட்ட பயனாளர்களை எட்டும் என்றும் கூகிள் கூறியுள்ளது.

அதிகரிக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை மற்றும் இந்திய பயனாளர்களிடையே அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடையும் கணக்கில் கொண்டு கூகிள் அவர்களுக்கு பாதுகாப்பான இணையதள அனுபவத்தை கொடுக்க பாடுபடும் என்று கூகிள் இந்தியாவின் பாதுகாப்பு இயக்குனர் சுனிதா மோகன்டி தெரிவித்துள்ளார்.
இந்திய இணையதள பயனாளர்கள் மத்தியில் இணையதள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரைவு பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட பல முயற்சிகளை கூகிள் மேற்கொண்டுள்ளது என்றும் இந்த பாதுகாப்பு சோதனைகளை செய்து முடிப்பவர்களுக்கு 2GB இலவச சேமிப்பு இடத்தை கூகிள் டிரைவில் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.