இணைய உலா

0

களந்தை செல்வன்

எச்சரிக்கை -இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் நிலை தீவிரத்திலிருந்து அபாயத்தை எட்டியுள்ளது!

இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகவும் மத்திய மோடி அரசு கூறிக்கொண்டிருக்கும் நிலையில்தான், பசி மற்றும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருவதாக (Global Hunger Index 2018) சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வுக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒரு தனி மனிதனுக்குக் கிடைக்க வேண்டிய மூன்று வேளை உணவு, உணவின் தரம், அதன் தன்மை முதலான அடிப்படைகளில் இந்த ஆய்வுகள் அமைகின்றன. 119 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது. இது அபாய நிலை என கூறப்படுகிறது.

தெற்காசிய அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூடான் முதலான நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது.

நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களின் வளமையில்தான். அதுவல்லாத எந்த ஒரு போலியான ‘ஜே’ கோஷங்களும் எதையும் சாதித்து விடப்போவதில்லை.

2014ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பசி பட்டினி குறியீட்டில், 119 நாடுகளில் இந்தியா 55 வது இடத்தில் இருந்தது. 2015ல் 80, 2016ல் 97, 2017ல் 100 என பிந்தங்கி இப்போது 103 வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.

இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் “விகாஸ் புருஷ்” “அபிவிருத்தி” என்று கார்ப்பரேட்டுகளாலும், கார்ப்பரேட்டு சாமியார்களாலும் புகழ்ப்படும் மோடியின் கீழ் இந்தியா எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

Rajan Kurai Krishnan

தாமரை மலர்வதை கலாய்த்து மீம்ஸ் போட்டுவிட்டு, காலி நாற்காலி கூட்டங்கள் படத்தை ஷேர் செய்துவிட்டால், இந்துத்துவத்தை புறம் கண்டுவிட்டோம் என்ற இருமாப்பு முகநூல் பதிவர்களுக்கு வந்துவிடும் போலிருக்கிறது. நண்பர்களே, அரசியல் என்பது தொடர் செயல்பாடு. முடிந்த முடிவு அல்ல. இது பெரியார் மண், திராவிடம் சவடால்கள், சலம்பல்கள் மட்டுமே நம்மை கரைசேர்த்துவிடும் என்று நினைப்பது அறியாமை. களத்தில் வேலை செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது என்று கற்கவும் வேண்டும். லெனின் சிலைகள் சாய்ந்த கதையெல்லாம் நினைவில் இருக்க வேண்டும். தோழர்களை இழப்பது சுலபம். உருவாக்குவது கடினம். கவனம்.

Ikram Naseer

நான் ஐம்பது வருடங்களாக அல்லாஹ்வை வணங்கினேன். ஆனால், மூன்று விடயங்களை எனது வாழ்வில் விட்டு விடும் வரை அதன் சுவையை என்னால் சுகிக்க முடியவில்லை:

01- மக்கள் திருப்திக்காக செயற்படுவதை நான் விட்டுவிட்டேன். எனக்கு சத்தியத்தைப் பேசும் இயலுமை கிடைக்கப் பெற்றது.

02- மோசடிகாரர்களது நட்பைத் துறந்தேன். எனக்கு நல்ல மனிதர்களின் சகவாசம் கிடைக்கப் பெற்றது.

03- உலகின் இன்பங்களின் பின்னால் செல்வதை விட்டுவிட்டேன். எனக்கு மறுமை இன்பங்களின் சுவை புரிய ஆரம்பித்தது.

-இமாம் அஹமத் இப்னு ஹர்ப் (றஹ்): ஸியர் அஃலாமுன் நுபலா-

*இவை வார்த்தைகளல்ல யதார்த்தம்… பலரால் புரிந்து கொள்ள முடியாத வாழ்வின் இரகசியப் புள்ளிகள்.

Vijayasankar Ramachandran

விண்வெளிக்கு 3 இந்தியர்களை அனுப்பும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை. இரண்டு பேரை அனுப்பினாலே நாடு சுபிட்சமடையும். செய்வீர்களா… செய்வீர்களா…

Marx Anthonisamy

பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..

இவர் ரஞ்சித் ரஞ்ஜன். பீகார் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். பப்பு யாதவின் மனைவி. முத்தலாக் சட்டத்திற்கு எதிராக இவர் நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள மசோதா என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட மட்டும் அல்ல அது குடும்பவியல் சார்ந்தது இதன் சாதகம், பாதகம் குடும்பம் சம்மந்தப்பட்டது.

இந்த மாசோதா விவாதம் பொருட்டு திருக்குர்ஆனை உள்ளார்ந்து பொருள்பட படிக்க நேரிட்டது

இதில் சூரத்துன் நிசாவில் தலாக் குறித்த ஐந்து அம்சங்களை தெளிவாககூறப்பட்டுள்ளது., மேலும் “சூரத்துல் பக்ரா”வில் தலாக் சட்டம் குறித்த தெளிவான வழிகாட்டுதல் உள்ளன.

எந்தெந்த காரணங்களுக்காக பெண் விவாகரத்து கோரலாம், எந்தெந்த காரணங்களுக்காக ஆண் விவாகரத்து கோரலாம் என்ற தெளிவான சட்ட நடைமுறை உள்ளது.

மூன்று தாலாக் கூற குறைந்தது 90 நாட்கள் கால இடைவெளி தேவைப்படுகிறது. இதில் ஒருமுறையாவது கணவன் & மனைவி ஒன்று சேர்ந்தால் கூட மீண்டும் முதல் முறையிலிருந்தே சட்டம் செல்லுபடியாகும்.

இவ்வளவு தொலைநோக்கு பார்வை, உலகில் எந்தச் சட்டத்திலும் இல்லை மேலும் இதை இந்திய விவாகரத்து சட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால் நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் உங்கள் எண்ணம் தவறு, உங்கள் நோக்கம் தவறு.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்பது வெகு சொட்பமே இதை அளவுகோலாக கொண்டு இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது

இதில் பெண்களுக்கான நீதி எங்குள்ளது? கணவனை சிறைக்கு அனுப்பிய பின் அந்த கணவன் மூன்று வருடம் கழித்து மீண்டும் விவாகரத்து தருவானேயன்றி ஜீவனாம்சம் தரமாட்டான், இதில் குழந்தைகளின் பொறுப்பு யாருக்கு சார்ந்தது? உங்களுக்கு பெண்களின் மீதோ, முஸ்லீம்கள் மீதோ எந்த அக்கறையும் இல்லை.

இந்த மசோதாவை நிறைவேற்றினால் முஸ்லீம் பெண்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் இதன் மூலம் முஸ்லீம்கள் வாக்கு பெற்றுவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு, ஒரு ஓட்டும் கிடைக்காது.

இந்த மசோதா பெண்கள் நலன் சார்ந்தது எனில் முஸ்லீம் பெண்களின் மீது மட்டும் கரிசனம் ஏன்? இந்து பெண்கள் மீது இந்த கரிசனம் இல்லை. எத்தனை பலாத்கார வழக்குகள், எத்துனை விவாகரத்துகள்.. இந்து கணவன்கள் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்களே இவர்களுக்காக ஏன் நீங்கள் சட்டம் இயற்றவில்லை?

சில ஆண்கள், தவறு செய்யும் ஆண்கள் அனைத்து சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் சட்டத்தையும் தவறாக பயன்படுத்துபவர்களே! அவர்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள்.

முஸ்லீம் சமூகம் தலாக் சட்டத்தை புரிந்து கொள்ளவும் இல்லை அதன் இயல்பில் அதை கடைபிடிக்கவும் இல்லை, இது புரிதல் மற்றும் பின்பற்றுதல் குறைபாடு. அதை, இந்த சட்டத்தின் அம்சங்களை அனைத்து முஸ்லிம்களும் எடுத்து கூற வேண்டும்.

முஸ்லிம் பெண்களில் கல்வியறிவு குறைந்தே உள்ளது. இந்துப்பெண்களில் கல்வி கற்றவர்கள் மிகுந்து உள்ளனர். உங்களது சட்ட நுணுக்கங்களை புரிந்து தனது வழக்கை எங்கு கொண்டு செல்வாள்?

அவளுக்கு யார்தான் உதவி புரிவார்கள்? கணவனை சிறைக்கு அனுப்பி விட்டு அவளது, அவள் குழந்தைகளுக்கு யார் செலவு செய்வார்கள்.

நீங்கள் அவளை அவளது சமுதாயத்திலிருந்து வெளியேற்றி அவளை நிர்க்கதியாக்கும் வகையில் சட்டம் இயற்ற முயற்சிக்கின்றீர்கள்.

இஸ்லாமிய விவாகரத்து சட்டங்களை முஸ்லிம் அறிஞர்கள் துணையுடன் இயற்றப்பட வேண்டும்.

என்னைக்கேட்டால் குர்ஆனின் அடிப்படையில் விவாகரத்து சட்டம் தான் ஆக சிறந்த சட்டமாக இருக்கும். பெண்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என்பதே எனது கோரிக்கை.

Govi Lenin

‘இந்தி’ பெல்ட் எனப்படும் மாநிலங்களை ‘இந்து’ வெறி பெல்ட்டாக மாற்றி தனது ஆளுகைக்குள் வைத்திருந்த பா.ஜ.க.வை அசைத்துப் பார்த்திருக்கிறது காங்கிரஸ். மோடிக்கும் ராகுலுக்குமான நேரடிப் போட்டியில் முதன்முறையாக ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தன் வலிமையைக் காட்டியுள்ளதன் விளைவுதான் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் கிடைத்துள்ள வெற்றி.

வாக்கு வித்தியாசம் மிக மெலிதாக இருப்பதும்-சில இடங்களில் காங்கிரஸைவிட பா.ஜ.க. கூடுதல் வாக்குகள் பெற்றிருப்பதும் காங்கிரஸ் கடக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, சாதி-, மத, -ஆதிக்க மனப்பான்மை ஊறிய ம.பி.யிலும் ராஜஸ்தானிலும் நகர்ப்புறங்களில் பா.ஜ.க.வை எதிர்கொண்ட அளவுக்கு கிராமப்புறங்களில் காங்கிரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதே நேரத்தில், சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தபோதும் அது பா.ஜ.க.வை துவைத்து எடுத்திருக்கிறது.

மக்களோடு நின்று அவர்களுக்கு நம்பிக்கை தருவதுதான் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கான அடிப்படை இலக்கணம். பழம் பெருச்சாளிகள் நிறைந்த வடமாநில காங்கிரஸில் இம்முறை மூத்தோர்-இளையோர் இணைந்த செயல்பாட்டு அணியை ராகுல் கட்டமைத்ததற்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளது. ஆனால், இம்மாநிலங்களில் பா.ஜ.க.வின் 15 ஆண்டுகால ஊடுருவலை எதிர்கொள்ள காங்கிரஸ் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.

தெலங்கானாவில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியும், வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் வசம் மிச்சமிருந்த மிசோரம் மாநிலத்தை இழந்திருப்பதும், காங்கிரசைவிட மாநிலக் கட்சிகள் வலுப்பெற்றுள்ள நிலையைக் காட்டுகிறது.

5 மாநிலங்களிலும் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டிருப்பதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் ‘கிஸீtவீ-மிஸீபீவீணீஸீ’களாகவே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. குறிப்பாக விவசாயிகள், -வணிகர்கள்,- இளைஞர்கள், -புதிய வாக்காளர்கள் என கிஸீtவீ-மிஸீபீவீணீஸீகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது.

மனிதர்களைவிட மாடுதான் முக்கியம். மாநில வளர்ச்சியைவிட கோவிலும் சிலைகளும்தான் முக்கியம் எனத் திமிர்த்தனத்துடன் திரிந்த மோடி- & அமித் ஷா- & யோகி உள்ளிட்டோருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் 5 மாநில மக்கள்.

‘சாவு பயத்தைக் காட்டிட்டானுங்கடா பரமா’ என்கிற நிலையில் பா.ஜ.க. தரப்பு இருக்கிறது.

பயம் காட்டிய காங்கிரஸ், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தன் பலம் காட்ட கூடுதல் கவனத்துடன் வியூகம் வகுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்த செமிஃபைனல் தேர்தலுக்குப் பிறகு, எந்தெந்த மாநிலங்களில் பா.ஜ.க. அல்லாத ஆட்சி என்கிற வரைபடத்தைப் பார்க்கையில், இந்தியா இப்போதுதான் புடவை கட்டி செல்ஃபி எடுத்தது போல இருக்கிறது.

Uvais Ahamed

Comments are closed.