இதயக் களைகளை அகற்றுவோம்!

0

இதயக் களைகளை அகற்றுவோம்!

குர்ஆனின் 14ஆவது அத்தியாயம் 24&27 வசனங்களில் ஏகத்துவ வார்த்தைக்கு, அதை உறுதியாக நம்பிய ஒரு நல்ல இறைநம்பிக்கையாளனுக்கு நல்ல மரத்தை உவமையாகக் கூறிய இறைவன், தீய வார்த்தையான இறை நிராகரிப்புக்கு, அதை நம்பும் ஒரு தீய மனிதனுக்கு கெட்ட மரத்தை உவமையாக எடுத்தியம்பியுள்ளான்.

‘தீய வார்த்தையின் நிலையானது, ஒரு தீய மரத்தைப் போன்றது. அது பூமியின் மேற்பரப்பிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டுவிட்டது, என்பதாக! அந்த வகையில், சில மரங்களை வளர்க்க வேண்டும் என்பதுபோலவே மனித சமூகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் சில மரங்களை நாம் பிடுங்கி எறியவும் வேண்டும்.

‘மரங்களை பிடுங்கி எறியுங்கள்’ என்று கூறுவது சற்று முரண்பாடாகத்தான் தோன்றும். ஆனால், அமெரிக்கத் தாவரவியல் பூங்கா, ‘வளர்க்கக் கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனிப் பட்டியலே வெளியிட்டுள்ளது. அதில் முன்னணியில் இருப்பது, முள்மரம் எனப்படும் ‘காட்டுக் கருவேல மரம்’.

கருவேல மரம் எந்தவித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் அது கவலைப்படாது. பூமியின் அடி ஆழம்வரை கூட தனது வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்ளும். இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டுவிடும்! … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.