இந்தியர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய பாகிஸ்தான் முடிவு

0

மீனவர்கள் உள்பட பாகிஸ்தான் சிறையில் வாடும் 360 இந்தியர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தியர்களை உடனடியாக விடுதலை செய்யவும், இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய வெளியவுத்துறை அமைச்சகம் சார்பில் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது.மேலும் சிறையில் கைதிகளாக உள்ள 360 இந்தியர்களை, வாரம் 100பேர் என்ற ரீதியில் இந்த மாதம் 29ஆம் தேதிக்குள் விடுதலை செய்யவுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு 442 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அதற்கு அடுத்ததாக தற்போது 360 மீனவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

Comments are closed.