இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் மோடி: அமெரிக்க டைம்ஸ் இதழில் கட்டுரை

0

இந்தியாவின் பிரித்து ஆளும் தலைவர் பிரதமர் மோடி என சூட்டி அமெரிக்க டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவில் வெளியாகும் சர்வதேச “டைம்ஸ் இதழ்” அதிகமான வாசகர்களை கொண்டுள்ளது. இந்த இதழ் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது தேர்தல் சமயத்தில் மோடி குறித்து கட்டுரை வெளியிட்டு உள்ளது. அதில் மோடியை  அட்டைப்படமாக வைத்து “இந்தியாவின் பிரித்தளும் தலைவர்” என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

“இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்” என்ற தலைப்புடைய இதழை ஆதீஷ் தஸீர் என்பவர் எழுதியுள்ளார். இந்த கட்டுரையில், இந்தியாவின் மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மோடியின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் குஜராத் கலவரத்தையும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.