இந்தியாவின் மதச் சுதந்திரத்தை கண்டித்து அமெரிக்கா அறிக்கை

0

புதுடெல்லி: சர்வதேச மத சுதந்திரத்தை கண்காணிக்கும் அமெரிக்க அரசு நிறுவனம் ஒன்றின் சமீபத்திய அறிக்கையில் பாஜக தலைவர் அமித்ஷா வின் பெயர் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச மத சுதந்திரதிற்கான அமெரிக்க ஆணையம் (US Commission of International Religious Freedom) தனது அறிக்கையில், மத மாற்று தடை சட்டத்தை முன்வைத்தவர்களில் அமித்ஷாவும் ஒருவர், மத மாற்றுத் தடை சட்டமானது கிறிஸ்தவர்களை அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது என்று கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் நலின் கோலி “பாஜக தலைவரின் பெயர் கூறப்பட்டிருப்பதை நான் முற்றிலுமாக நிராகரிக்கிறேன். இது மிகவும் தவறானது. அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் முதலில் அதைப் படித்துவிட்டுத்தான் அதை விமர்சிக்க வேண்டும். ” என்றார்.

இதனிடையே, அந்த அமெரிக்க அமைப்பைச் சார்ந்த இருவருக்கு மார்ச் மாதம் இந்தியா வருவதற்கான விசா மறுக்கப்பட்டு அவர்கள் இந்தியாவின் நிலைமையை ஆராய எந்த அவசியமும் இல்லை என அரசாங்கம் காரணம் கூறியது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையில், இந்தியாவில் மத சகிப்புத் தன்மை சீரழிந்துவிட்டது என்றும் சிறுபான்மையினரை பயமுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரிவினருக்கு பாஜக உறுப்பினர்களால் மதத்துவேச பேச்சுக்கள் மூலம் தந்திரமாக ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

பாஜக எம்பிக்களான யோகி ஆதித்யானந் மற்றும் சாக்க்ஷி மகாராஜ் ஆகியோரின் பெயர்கள் முஸ்லிமகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்ததற்காக தனித்தனியே இடம் பெற்றுள்ளன. மேலும் அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு மே மாதம் மத்திய பிரதேசத்தில் கிறிஸ்துவர்களின் நிகழ்ச்சி ஒன்று அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்டதும் இதற்கு காரணம் ஆர்எஸ்எஸ் கொடுத்த அழுத்தமே என்று கிறிஸ்துவர்களால் நம்பப்படுவதும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நாடு மக்களுக்கு உறுதியளித்துள்ள மத சுதந்திரம் மற்றும் பிற சுதந்திரங்களை தீர்மானிக்கவோ அங்கீகரிக்கவோ எந்த அமெரிக்க நிறுவனமும் தேவையில்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது.

Comments are closed.