இந்தியாவின் மிகப்பெரிய எதிரி ஆர்.எஸ்.எஸ். : முன்னாள் நீதிபதி கோல்சே படில்

0

இந்தியாவின் மிகப்பெரிய எதிரி ஆர்.எஸ்.எஸ். தான் என்று பாம்பே உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோல்சே படேல் கூறியுள்ளார். கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “வெறுப்பு அரசியலை நிறுத்து” பிரச்சாரத்தின் முடிவு நிகழ்ச்சியில் தனது இந்த கருத்தை அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. இதனை நான் எழுத்து மூலமாக கூறமுடியும், மீண்டும் கூறுகிறேன், இதனை நான் எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ். இன் விஷ கொள்கைகளை கொள்கை ரீதியாக நாம் தோற்கடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்துத்வா என்பது பிராமணியத்தின் மறைமுக ஏமாற்றுப் பெயர் என்றும் இந்தியாவின் உண்மையான எதிரிகள் முதலாளித்துவமும் பிராமணியமும் தான் என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய மக்களின் அனைத்து தரப்பினரும் ஆர்.எஸ்.எஸ். இன் மதவாதத்தை கூட்டாக இணைந்து எதிர்க்க வேண்டியதின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் ஆர்.எஸ்.எஸ். இன் பிரச்சாரங்களுக்கு இந்தியாவின் அமைதியை விரும்பும் குடிமக்கள் பலியாகிவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது. பிராமணர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். நிலைநிறுத்த விரும்பும் பிராமணியத்திற்கு மட்டும் அல்ல. இந்தியாவை ஹிந்துஸ்தான் என்று அழைக்க கூடாது. ஏனென்றால் அது இந்துக்களை மட்டும் குறிக்கிறது. மாறாக இந்தியாவை பாரத் என்றோ இந்தியா என்றோ அழைக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து இந்தியர்களும் இந்துக்கள் அல்ல.” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மணி ஷங்கர் ஐயர், இந்தியாவை முஸ்லிம்கள் அல்லாமலும் முஸ்லிம்களை இந்தியா அல்லாமலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் சமத்துவத்தின் செய்தியே மக்களை இஸ்லாம் பக்கம் ஈர்த்து மக்களின் மனதை ஆட்கொண்டது என்று கூறியுள்ளார். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று கூறுவோருக்கு, 666 ஆண்டுகாலம் இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டார்கள் என்றும் ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 24% பேர் தான் என்றும் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்தார்.

பா.ஜ.க அரசின் வரலாற்றை காவிமயமாக்கும் முயற்சி குறித்து தனது கவலையை தெரிவித்த மணி ஷங்கர் ஐயர், மதவாத நோக்கங்களுக்காக வரலாறு திரிக்கப்பட்டு முஸ்லிம்கள் குறித்த தவறான கருத்து காவிமயமான வரலாறுகளால் பரப்படுகிறது என்று கூறினார். மேலும் வெறுப்பு அரசியல் நம்மை எங்கும் கொண்டு செல்லாது என்றும் மாறாக அது இந்தியாவை பலகீனப்படுத்திவிடும் ஒன்று நாம் அனைவரும் இதில் இருந்து மீள வேண்டும் இல்லை என்றால் அனைவரும் இதில் அழிந்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

SAHRDC இன் இயக்குனர் ரவி நாயர் தனது உரையில், “ஆர்.எஸ்.எஸ். ஒரு புரளி பரப்புபவர்களின் கூட்டம்,அவர்களால் புரளிகளை பரப்பாமல் இருக்க முடியாது. அவர்களை 2019 நாக்பூருக்கு திருப்பி அனுப்ப நாம் ஆயத்தமாக வேண்டும்” என்று கூறினார்.

நம் நாட்டின் உளவுத் துறைகள் ஆர்.எஸ்.எஸ். இன் கட்டுபாட்டில் இருக்கின்றன. இந்த உளவு பிரிவுகள் பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கச் செய்வது காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறினார். இந்தியாவில் மட்டும் தான் உளவுப் பிரிவுகள் எந்த வித கட்டுப்பாடும் இன்றி இயங்குகின்றன என்றும் இந்தியாவில் மட்டும் தான் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலங்கள் நீதிமன்றங்களில் ஆதாராமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது, அதனால் CRPC இன் பிரிவு  197 ஐ உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் அப்பாவிகளை போலியான தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்கும் உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதற்கு பொறுப்பேற்க ஆவன செய்யவேண்டும் என்றும் பல ஆண்டுகாலம் சிறையில் வாடி பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்படுபவர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவும் வழிவகை செய்யபப்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

BAAMCEF தேசிய தலைவர் வாமன் மிஷ்ரம், தேசத்தின் 52% உள்ள தலித் மற்றும் ஆதிவாசி மக்களை இந்துகள் என்று கூறக்கூடாது என்றும், 3.35% இருக்கும் பிராமணர்கள் மட்டும் தான் இந்துக்கள் என்றும் கூறியுள்ளார். ஒரு சமூகத்தை அடிமைப் படுத்துபவனும் அடிமையும் இந்துக்களாக இருக்க முடியாது என்றும் இந்துக்கள் என்பவர்கள் மக்களை அடிமைப் படுத்துபவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை உரை வழங்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் கே.எம்.சரீஃப் நாட்டின் தற்போதையை நிலையை விளக்கிக் கூறினார். “பா.ஜ.கவின் அதிகாரத்திற்கான பாதை மதசார்பற்ற கட்சிகளிடையே பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து அதன் வெறுப்பு நோக்கங்களை வெளிப்படையாக கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. முஸ்லிம்கள், தலித்கள், மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதலின் போது அரசின் அமைதி இதனை உறுதி படுத்துகிறது” என்று கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் NEC   உறுப்பினர் அனிஸ் அஹமத், “இந்த வெறுப்பு அரசியலை நிறுத்து என்கிற பிரச்சாரம் கடந்த இருபது வருடங்களாக நடைபெற்று வரும் பல செயல்பாடுகளின் தோடர்ச்சி. நாங்கள் இந்த நாட்டு மக்கள் முன்னிலையில் இந்த நாட்டின் அச்சுறுத்தல்களை அடையாலப்படுத்துகின்றோம். நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாகாக்களில் பயிற்ருவிக்கப்படும் இந்துத்வா கொள்கைகளே காரணம். இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை அரசு ஏற்று நாட்டுமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்“ என்று கூறினார். மதவாதத்தையும் ஃபாசிசத்தையும் எதிர்க்க முஸ்லிம்கள், சிறுபான்மையினர், தலித் சமூகத்தினர், ஆதிவாசிகள், நாட்டின் முன்னேற்றத்தை விரும்புபவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Comments are closed.