இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து: அவர் பெயர் நாதுராம் கோட்சே! கமலின் கருத்தால் சர்ச்சை

0

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரருக்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு பேசியது: “முஸ்லீம்கள் பலர் இங்குள்ளனர் என்பதற்காக நான் இதனை கூறவில்லை. காந்தியின் சிலையின் முன்பு நின்று இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று தெரிவித்தார்.

இவரின் இந்த பேச்சால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

Comments are closed.