இந்தியாவின் வசந்த காலம்!

0

இந்தியாவின் வசந்த காலம்!

நவம்பர் 8, 2016… தொலைக்காட்சியில் திடீரென தோன்றிய பிரதமர் மோடி, நாட்டில் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். பிரதமரின் இந்த முட்டாள்தனமான, மக்கள் நலன் விரோத, முன்யோசனை இல்லாத அறிவிப்பை எதிர்த்து பெரும் போராட்டங்களில் ஈடு¢பட்டிருக்க வேண்டிய நாட்டு மக்கள், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும் புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கும் வங்கி வாசல்களில் நாள் கணக்கில் காத்துக் கிடந்தனர். மக்களின் முதுகெலும்பை முறிக்கக் கூடிய அறிவிப்பாக இருந்தாலும் அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையை மோடி அரசாங்கத்திற்கு மக்களின் இந்த செயல்பாடு கொடுத்தது. அதன் பின்னர் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த அனைத்து சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் இதுவே தொடக்கப் புள்ளி.

இதே நம்பிக்கையில்தான் குடியுரிமை திருத்த மசோதாவையும் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் 2016இல் சத்தமின்றி ஏற்றுக் கொண்டது போல் இப்போது மக்கள் ஏற்கவில்லை. இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்தியா எனும் கருத்தாக்கத்திற்கும் நேர் முரணாக இருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இந்திய குடியுரிமை சட்டம், 1955இல் திருத்தத்தை கொண்டு வந்த பா.ஜ.க. அரசாங்கம், டிசம்பர் 31, … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.