இந்தியாவில் சிறுவர்களிடம் அதிகரித்து வரும் புற்றுநோய்

0

இந்தியாவில் ஒரு வயதில் இருந்து 14 வயது வரையிலான சிறுவர்களிடம் புற்றுநோய் அதிகளவில் பரவுவதாக பா.ஜ.க வின் பிரபாத் ஜா மாநிலங்கள் அவையில் நேற்று கூறியுள்ளார்.

சராசரியாக ஒரு நாளில் 50 குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என்றும் ஒரு வருடத்திற்கு இந்த தொகை 18,000த்தை எட்டுகிறது என்றும் புற்றுநோய் தொடர்பான அறிக்கை ஒன்றிலிருந்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து புற்றுநோய் தொடர்பான தேசிய வரைவு ஒன்றை செயல்படுத்தி புற்றுநோயை முன்னதாகவே கண்டறிந்து தடுக்க வேண்டும் என்று பிரபாத் ஜா கூறியுள்ளார்.

இது குறித்து துணைத் தலைவர் குரியன் கருத்து தெரிவிக்கையில் புற்றுநோய் நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது என்றும் அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த முக்தர் அப்பாஸ் நக்வி, புற்றுநோய் பரவுவதை தடுக்க அரசு ஆவன செய்து வருவதாக கூறினார்.

Comments are closed.