இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது – இஸ்லாமிய அமைப்பு

0

All India Tanzeem Ulema-E-Islam என்ற சுபி-சன்னி அமைப்பு இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருவதாகவும் அது ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் இல்லாமல் பல வெவ்வேறு பெயர்களை கொண்டு செயல் படுவதாகவும் கூறியுள்ளது.

தங்களது ஒரு நாள் மாநாட்டில் இந்த AITUI அமைப்பு கூறியதாவது, இந்திய பல்கலைகழகங்களில் மாணவர்களுக்கு அளித்துவரும் இஸ்லாமிய கல்வியை நன்கு ஆராய வேண்டும் எனவும், இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத ஆதிக்கத்தை போக்க சூஃபி கல்வியை போதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

“உலகில் தீவிரவாத செயல்கள் அதிகரித்துவிட்டன. அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு சூஃபி-சன்னி முஸ்லிம்களை இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறுகிறோம். ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் இந்தியாவில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

“இத்தகைய ஐ.ஸ்.ஐ.எஸ் இன் அமைப்புகள் மாநாடுகள் நடத்துகின்ற, அதற்காக சவூதி மற்றும் கத்தாரில் இருந்து நிதி வசூல் செய்கின்றன. மத்திய அரசு இத்தகைய அமைப்புகள் அனைத்தையும் தேசிய பாதுகாப்பு கருதி தடை செய்ய வேண்டும்” என்று AITUI இன் தலைவர் முஃப்தி முஹம்மத் அஷ்ஃபக் ஹுசைன் காதிரி கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய உயர்கல்வியின் ஒரு அங்கமாக சூஃபி பாடங்களை மாணவர்களுக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் NSA வின் அஜித் தோவலும் நாட்டின் பல முஸ்லிம் அறிஞர்களை சந்தித்து ஐ.எஸ்.ஐ.எஸ். குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.