இந்தியாவில் நான்கு பிச்சைகாரர்களில் ஒருவர் முஸ்லிம்

0

சென்ற மாதம் வெளியான 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மொத்தம் 3.7 லட்சம் பிச்சைக் காரர்கள் உள்ளனர் என்றும் அதில் 25% பேர் முஸ்லிம்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த 25% ஆனது 92760 முஸ்லிம் பிச்சைகாரர்களை உள்ளடக்கும்.

மேலும் இந்த கணக்கெடுப்பின்படி முஸ்லிம் பிச்சைக்காரர்களில் பெரும்பான்மையினர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. இது மற்ற சமூகத்தின் பிச்சைகாரர்களுக்கு நேர் மாற்றமாக அமைந்துள்ளது. அரசு வழங்கும் சேவைகளை மற்றும் சலுகைகள் இவர்களுக்கு சரிவர கிடைக்கப் பெறாததே இவர்கள் பிச்சைக் காரர்களாக மாறுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

muslim beggars
நன்றி:இந்தியன் எக்ஸ்பிரஸ்

இந்த எண்ணிக்கை குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு அரசு உதவிகள் மறுக்கப்படுவதற்கு ஆதாரமாக உள்ளது என்று கோஷிஷ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்முஹம்மத் தாரிக் தெரிவித்துள்ளார். இந்திய ஜனத்தொகையில் முஸ்லிம்களின் சதவிகிதம் 14.23% ஆக இருக்க பிச்சைக்கார்களில் முஸ்லிம்களின் சதவிகிதமோ அதை விட 10% கூடுதலாக 25% ஆக இருகின்றது வேதனைக்குரியது. மேலும் இந்திய முஸ்லிம்கள் பொருளாதார ரீதியிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். ஒரு முஸ்லிமின் ஒரு நாள் சராசரி செலவு 33 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிச்சை எடுப்பது சட்டவிரோதம் ஆகும். 1959 பாம்பே பிச்சை தடுப்பு சட்டத்தின் படி பிச்சை எடுப்பவர்களுக்கு 3 முதல் 10 வருட சிறை தண்டனை கிடைக்கைகூடும். ஆனால் சமூக ஆர்வலர்கள் இந்த சட்டம் வாழ்வாதாரமற்ற ஏழைகளுக்கு மறுவாழ்வு வழங்குவதை விட்டுவிட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரிகின்றது என்று கருத்து தெரிவிகின்றனர்.

Comments are closed.