இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை

1

இந்தியாவில் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 90% குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் அவதிப்படுகின்றன என்று தேசிய குடும்ப நல கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

National Family Health Survey எடுத்த (2015-2016) கருத்துக்கணிப்பின் படி, நாட்டில் உள்ள ஆறு முதல் 23 மாதங்களான குழந்தைகளில் 10 இல் 9 குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.

Child Rights and You என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் படி, தேசிய அளவில் தமிழ் நாட்டில் தான் அதிகப்படியான குழந்தைகள் ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்றவர்களாக உள்ளனர் என்றும் ஆனால் அதுவும் கூட வெறும் 31% தான் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள கர்நாடகாவில் 8% குழந்தைகளுக்கு மட்டுமே போதிய ஊட்டச்சத்து கிடைகின்றதாக தெரிய வந்துள்ளது. பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வெறும் 3% குழந்தைகளுக்கே போதிய ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்று நாட்டிலேயே மிக மோசமான நிலையில் உள்ளது. இதே போன்று குஜராத், உத்திர பிரதேசம், டில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் மோசமான ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்ற குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.

இதுவல்லாமல் நாட்டில் உள்ள 15 வயது முதல் 49 வயது வரையிலான கர்பிணிப் பெண்களில் 50% பெண்கள் இரத்த சோகையுள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் மொத்த கர்பிணிப் பெண்களில் வெறும் 21% பெண்களுக்கு மட்டுமே கற்பகால பரமாரிப்பு கிடைப்பெருகிறது. கர்ப்பகாலத்தில் தாயின் உடல் நிலை, குழந்தையின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். இந்த பாதிப்பு அந்த குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2015-2016 இல் கர்நாடகாவில் 67% கர்பிணிப் பெண்களுக்கு முழுமையான கற்பகால பராமரிப்பு கிடைக்கவில்லை. இதில் 45% கர்பிணிப் பெண்கள் இரத்த சோகை உள்ளவர்கள்.

இது குறித்து CRY அமைப்பின் இயக்குனர் கோமல் கங்கோத்ரா கருத்து தெரிவிக்கையில், “குழைந்தைகளின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகளுக்கு என போதுமான நிதி ஒத்திகிடுவது எந்த ஒரு சமரசமின்றி அரசால் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Discussion1 Comment

  1. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு கர்பிணிகளின் ஊட்டச்சத்து குறைபாடு இதையெல்லாம் சரி செய்ய நிதியில்லை , இதில் மானிய விலை ரேஷன் அரிசி கோதுமை விளையும் உயர்தியுள்ளது மத்திய பிஜேபி அரசு.

    ஆனால் பசு பாதுகாப்பு என்று சொல்லி கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி அதிலும் ஊழல் செய்கிறார்கள் பிஜேபி ஆட்சியாளர்கள்