இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான்!

0

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுதல் தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேசிய பாதுகாப்பு குழுவை (NSC) நேற்று கூட்டினர். இதில் சிவில்-இராணுவ அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்குப் பதிலடியாக இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை தர மதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இதுக்குறித்து பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கத்தில், “தேசியப் பாதுகாப்புக் கமிட்டி இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவுகளை குறைக்கவும், வர்த்தக உறவுகளை முறிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இருதரப்பு ஏற்பாடுகளை மறு சீராய்வு செய்யவும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் “கொடூரமான இனவேறி, மனித உரிமை மீறல் இந்திய அரசை அம்பலப்படுத்த அனைத்து தூதரக வழிமுறைகளையும் முடுக்கி விடவும் பாகிஸ்தான் ராணுவம் முழு கண்காணிப்பில் இருக்கவும் பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.