இந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் நடத்திய ஹஜ் பாதுகாப்பு வழிகாட்டி முகாம்!

0

இந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் நடத்திய ஹஜ் பாதுகாப்பு வழிகாட்டி முகாம்! : பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் பங்கேற்பு!

இந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் சார்பில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு வழிகாட்டி முகாம் சென்னையில் 22.07.18 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

இந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் ஜித்தா மண்டல தலைவர் பைசுதீன் முன்னிலை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், இந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் ஜித்தா தமிழ்பிரிவு செயற்குழு உறுப்பினர் முகம்மது வசிம், இஸ்லாமிய தகவல் ஆராய்ச்சியகம் தலைவர் மௌலவி எஸ். அப்துல் காதர் ஹசனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டன.

இதே போன்று இராமநாதபுரத்தில் ஜூலை 20ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி கலந்து கொண்டார். ஜூலை 24ம் தேதி திருச்சி நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஆ. ஹாலித் முகம்மது, இந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் ஜித்தா தமிழ்பிரிவு செயற்குழு உறுப்பினர் சேக் ஆகியோர் பாதுகாப்பு வழிகாட்டுதலை வழங்கினர். ஜூலை 21, 26 தேதிகளில் காயல்பட்டிணம் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Comments are closed.