இந்தியா  ஃப்ரடர்னிட்டி ஃபோரம் ரியாத் நடத்திய இரத்ததான முகாம்

0

18 டிசம்பர் 2015 அன்று இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபோரம் ரியாத் மண்டலம் ரியாத் கிங் பஹத் மெடிக்கல் சிட்டியில் நடத்திய  இரத்ததான முகாமில்,   340 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

முழுக்க முழுக்க இந்தியர்களை உறுப்பினர்களாக‌ கொண்டு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக சமூக சேவைகள் புரிந்துவரும்  இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபோரம் தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பாக சவுதி அரேபியாவில் பல்வேறு சமூக சேவை நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு நாடுகளிலிருந்து வரும் ஹஜ் யாத்திரிகளின் சிரமங்களை போக்குவதற்காக ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களை களப்பணியில் ஈடுபடுத்தி சேவையாற்றி வருகிறது இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபோரம். அதே போன்று ஒவ்வொரு வருடமும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ‘ஆரோக்கியமான வாழ்வு! ஆரோக்கியமான குடும்பம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வருடம் 2015ல் சவுதி அரேபியாவின் பெருநகரங்களில் கடந்த நவம்பர் மாதம் இப்பிரச்சாரம் துவங்கப்பட்டது. சவுதி அரேபியா தலை நகரம் ரியாதில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கிரிக்கெட், கால்பந்து  விளையாட்டுப்போட்டிகள்,  உடற்பயிற்சி செயல்முறை விளக்கங்கள் ,இரத்த தான முகாம்கள் என பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் இப்பிரச்சாரத்திற்கான துவக்க நிகழ்ச்சியை ரியாத் மண்டல செயலாளர்  ஜுனைத்  துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று மன்னர் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் வைத்து  இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 340 ற்கும் மேற்பட்ட ஐ எப் எப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர் . இம்முகாமிற்கான ஏற்பாடுகளை IFF – RIYADH இன் வட மாநிலப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரம்ஜுதீன் ஏற்பாடு செய்திருந்தார் . இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபோரத்தின் இந்நிகழ்ச்சியை கிங் பஹத் மருத்துமனையின் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Comments are closed.